அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகன் திடீர் தற்கொலை...! காரணம் என்ன..?

அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மருமகன் சரவணன் மதுரையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

AIADMK ex minister son in law committed suicide has created sensation

தூக்கிட்டு திடீர் தற்கொலை

அதிமுக ஆட்சி காலத்தில் மதுரை மாநகர் கருப்பாயூரணி அருகே ஒத்தப்பட்டி பகுதியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மகள் சுமதி மற்றும் அவரது கணவர் சரவணன்(42) தம்பதியினர் இரு குழந்தைகளுடன் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு சரவணன் தனது அறையில் தனியாக படுத்து உறங்கியுள்ளார். இதனையடுத்து இன்று அதிகாலை மனைவி சுமதி சரவணனை எழுப்புவதற்காக கதவை தட்டியுள்ளார்.  கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காத நிலையில் அருகிலுள்ள சரவணனின் சகோதரர் கர்ணனை அழைத்துவந்து பார்த்துள்ளனர். இதையடுத்து  கடப்பாரை மூலம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது  சரவணன் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.  இதனையடுத்து  கருப்பாயூரணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

திமுக தலைவராக 5ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின்...! அரசியல் களத்தில் சாதித்தது என்ன..?

AIADMK ex minister son in law committed suicide has created sensation

தற்கொலை காரணம் என்ன..?

இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் மோகன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும்  கருப்பாயூரணி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் பாஸ்கரனின் மருமகன் சரவணன், தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்

இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்...! அலறும் இபிஎஸ் அணி... அடுத்து தூக்கப்போவது யாரை தெரியுமா...?

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios