இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்...! அலறும் இபிஎஸ் அணி... அடுத்து தூக்கப்போவது யாரை தெரியுமா...?
உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அடுத்ததாக தென் மாவட்டத்தை சேர்ந்த மூத்த நிர்வாகிக்கு ஓபிஎஸ் அணி ஸ்கெட்ச் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ்- இபிஎஸ் மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஓபிஎஸ் எதிர்ப்புக்கு மத்தியில் ஜூன் 23 ஆம் தேதி கூடிய பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11 ஆம் தேதிக்கு பொதுக்குழு கூட்டத்தையும் இபிஎஸ் அணியினர் கூட்டினர். இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார். அதே நேரத்தில் அதிமுகவின் அடிப்படை பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்தும் ஓபிஎஸ்சை நீக்கி சிறப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே அதிமுகவில் தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓபிஎஸ்- இபிஎஸ் இணைந்து தான் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஓபிஎஸ் அதிகரிக்கும் ஆதரவு
நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் அதிமுகவில் அனைவரும் ஒன்றினைந்து இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என கூறியுள்ளார். இதனால் ச்சிகலா உள்ளிட்ட அனைவரும் ஒன்றினைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து நடிகர் பாக்யராஜ் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக ஓபிஎஸ்சை சந்தித்து ஆலோசித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லோரும்ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தி வருகிறார். சிறிய தொண்டனாக என்னால் முடிந்த வேலைகளை கட்சிக்காக செய்ய இருக்கிறேன். கட்சியில் அனைவரும் இணைவதற்காக நானும் பழனிசாமியை நேரில் சென்று அழைப்பேன் என கூறியிருந்தார்.
உசிலம்பட்டி எம்எல்ஏ ஆதரவு
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன், ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்த ஐயப்பன், தனக்கு ஏற்பட்ட அவமானங்களை தாங்கி கொண்டு அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என ஓ.பி.எஸ் கூறினார். எனவே அவருக்கு ராமருக்கு பாலம் கட்ட அனில் உதவியது போல உறுதுணையாக இருப்பேன். என்னைப்போன்று மற்ற எம்.எல்.ஏக்களும் ஒபிஎஸ்-க்கு ஆதரவு அளிப்பார்கள் என ஐயப்பன் தெரிவித்துள்ளார்.
அடுத்த நபர் யார்..?
கடந்த 3 தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை இழந்து, அரசியல் எதிர்காலத்தை தொலைத்து விட்டு, ஆதரவு இல்லாமல் நிற்கின்ற ஓபிஎஸ் தனக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டிக் கொள்ள ஓபிஎஸ்சும் அவரது புதல்வர்களும், தொண்டர்கள் ஆதரவை பெற பதவி,பணம் என்று விலை பேசி வரும் நடவடிக்கைகள் தொண்டர்களை வேதனை அடையச் செய்துள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த நிலையில் , ஓபிஎஸ் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து இபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து தீவிரமாக செயல்பட்டு வரும் முக்கிய நிர்வாகியை தங்கள் தரப்பிற்கு தூக்க ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முடிவெடுத்து அதற்கான பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்