இதனால் தான் 'கோப்ரா' ப்ரோமோஷனில் கலந்து கொள்ளவில்லை..புதிய விளக்கம் தந்த இயக்குனர்
'மன்னிக்கவும் விரைவில் இணைவேன் ' என விக்ரம் கோப்ரா ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர்
விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கோப்ரா படம் விரைவில் வெளியாக உள்ளது. வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் தடபுடலாக நடைபெற்று வருகிறது. அதையொட்டி விக்ரம் மற்றும் படத்தின் நாயகி உள்நாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மேலும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தை ஒட்டி இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். முன்னதாக படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த ட்ரெய்லரில் பல தோற்றத்தில் சியான் காட்சியளித்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...வண்ண கலவையில் மின்னும் ரம்யா பாண்டியன்...ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் மனதை மயக்கும் போஸ்
கடைசியாக விக்ரம் நடித்த மஹான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதோடு ஓடிடியில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தான் கோப்ரா வரும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக வெளியாக உள்ளது. இந்தப்படம் சீயானின் திருவிழா படமாக அமைவதோடு ரசிகர்களின் திரையரங்கு கொண்டாட்டத்திற்கும் வழி வகுத்துள்ளது.
கே.ஜி.எப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, மீனாட்சி, மியா ஜார்ஜ், இர்பான் பதான், ரோஷன் மேத்யூ மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் உள்ளிட்டோர் இந்த படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாக உள்ளனர். அதோட படத்திற்கான தணிக்கை சான்றிதழ் குறித்த விளக்கமும் திரைப்பட நீளம் குறித்தான தகவலும் வெளியாகியிருந்தது. அதன்படி கோப்ரா யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது. மேலும் மூன்று மணி நேரம் மூன்று நிமிடம் மூன்று வினாடிகள் நீளம் கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு... ஒரு பக்க சேலையை சரியவிட்டு மனதை கலங்கடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி...
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் முன்னதாக நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியின் மூலம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நாயகன் உள்ளிட்ட படக்குழு கலந்து கொள்ளும் ப்ரோமோஷன் விழாக்களை இயக்குனர் புறக்கணிப்பதாக குற்றசாட்டு எழுந்தது. சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட நாயகன் விக்ரமே படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் கலந்து கொள்ளும்போது ஏன் இயக்குனர் கலந்து கொள்ளவில்லை என்கிற கேள்வியும் எழுந்தது.
இது குறித்து படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கத்தை அளித்துள்ளார். இயக்குனர் வெளியிட்ட பதிவில், 'மன்னிக்கவும் விரைவில் இணைவேன். படத்தின் இறுதி கட்ட வேலைகளில் மாட்டிக் கொண்டேன். விக்ரமுடன், ஸ்ரீநிதி , மிர்னாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்ட ப்ரோமோஷன்களை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். என எழுதியிருந்தார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு... சென்னையில் புதிதாக சொகுசு வீடு வாங்கிய நடிகர் விஜய்... அதன் விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!