Asianet News TamilAsianet News Tamil

நிதியே இல்ல.. இதுல 80 கோடிக்கு பேனா அவசியமா? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி வீட்டு இல்ல திருமண விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வந்தார்.

80 crores pen monument necessary asked admk edappadi palanisamy at trichy
Author
First Published Aug 28, 2022, 9:21 PM IST

திருச்சி வயர்லெஸ் சாலையில் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியும் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.அதிமுக 30 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக. தமிழ்நாடு வளம் பெற உதவி செய்தவர்கள் எம்.ஜி‌ஆர்‌, ஜெயலலிதா. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ரிப்பன் கட் செய்து திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இதற்குத்தான் ஸ்டிக்கர் ஒட்டிகிறார்கள். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கி வருகிறது. திமுக அரசின் மெத்தனப்போக்கால் திட்டங்கள் முடங்கியுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கதவணை உடைந்த உடன் 325 கோடி நிதி ஒதுக்கி அணை கொண்டு வந்தோம். அதை முடக்காமால் வேகமாக மக்களின் பயன்பாட்டுக் கொண்டு வாருங்கள்.சத்திரம் பேருந்து நிலையம், நேப்பியர் பாலம் போல் உள்ள கொள்ளிடம் பாலம் உட்பட அதிமுக கொண்டு வந்தது. 

80 crores pen monument necessary asked admk edappadi palanisamy at trichy

மேலும் செய்திகளுக்கு..கூட்டணி சேர்ந்த மோடி - ஸ்டாலின்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா - இது தெரியாம போச்சே!

ஸ்ரீரங்கம் பகுதியில் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் கொண்டு வர நிதி ஒதுக்கினோம் ஆனால் அந்த திட்டத்தை திமுக அரசு முடக்கியுள்ளது. மகளிர் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், பொறியல் கல்லூரி சேதுராப்பட்டி, டிஎன்பிஎல், வண்ணத்துப்பூச்சி பூங்கா, யாத்ரி நிவாஸ் இந்த திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக அரசு.15 மாத ஆட்சியில் ஆன்லைன் ரம்மி மட்டும் தான் கொண்டு வந்தீர்கள். 

அதன் மூலம் பணம் செல்ல வேண்டியவர்களுக்கு சரியாக செல்கிறது. திமுக அரசு போட்டோ சூட்‌ மட்டுமே செய்கிறது. அதை தொலைக்காட்சியில் போடுகிறார்கள். நிதி இல்லாத போது ஏன் எழுதாத பேனா வைக்க வேண்டும். 80 கோடிக்கு போனா அவசியமா.இதை வைத்து 6 அரை கோடி மக்களுக்கும் பேனா வாங்கி கொடுத்து விடலாம். பேனா வையுங்கள் 1 கோடியில் வையுங்கள் வேணாம் என்று சொல்லவில்லை. 

இந்த ஆட்சி வந்த பிறகு சொத்து வரி போனஸ், தண்ணீர் வரி, மின் வரி போனஸ் போன்ற போனஸ்கள் வழங்கியுள்ளனர். சொத்து வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.மின் உயர்வு 50% உயர்த்தியுள்ளனர். திமுக அரசு நிதி இல்லை என்று சொல்கிறார் இதை தெரிந்து தானே உங்கள் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. நிறைவேற்ற முடியாத திட்டம் உரிமைத் தொகை 1000 ரூபாய் கைவிரித்துவிட்டராகள். கேஸ் சிலிண்டர் மானியம் 100, கல்வி வங்கி கடன் ரத்து எதையுமே செய்யவில்லை.விவசாய கடன் நான் முதலமைச்சராக இருக்கும் போது ரத்து செய்தேன். 

மேலும் செய்திகளுக்கு..விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. 2 நாட்கள் பிரியாணி கடைகள் மூட உத்தரவு !

80 crores pen monument necessary asked admk edappadi palanisamy at trichy

விவசாயிகளுக்கு இழப்பீடுகள் தொகை அதிகமாக கொடுத்தது அதிமுக. மழை வெள்ளத்தால் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை எந்த அமைச்சரும் பார்க்கவில்லை. குடிமராமத்து பணி செய்து விவசாயத்தை காப்பாற்றினோம். எந்த கொம்பனாலும் அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது. சிலர் வேண்டுமென்றே திமுகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக எதிர்க்கபார்க்கிறார்கள் அது ஒரு போதும் நடக்காது. 

இவர் அம்மா விசுவாசி என்கிறார். நான் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன் நான் தான் ஜெயலலிதா விற்க்கு விசுவாசமாக இருந்தேன். அவர்‌எதிர் தரப்பில் நின்றார். அவர் எப்படி விசுவாசி என்கிறார். அதிமுக அலுவலத்தை உடைத்தவர் இவரை எப்படி இணைக்க முடியும். அவர் முன்னிலையில் இருந்து செய்கிறார். நான் கட்சியை உயர்வாக நினைக்கிறேன். அவர்கள் வியாபாரமாக நினைக்கிறார்கள். இவரை போல எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது’ என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

Follow Us:
Download App:
  • android
  • ios