நான் ஒர்க் பண்ணதிலேயே மிகவும் ஒழுக்கமான நடிகர் விஷால் தான்... மனம்விட்டு பாராட்டிய மிஷ்கின்
Mysskin : ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் 15வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மிஷ்கின் நடிகர் விஷாலை பாராட்டி பேசியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஷாலும், இயக்குனர் மிஷ்கினும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் துப்பறிவாளன். கடந்த 2017-ம் ஆண்டு ரிலீசான இப்படத்தில் விஷாலுடன் பிரசன்னா, ஆண்ட்ரியா, அனு இமானுவேல், வினய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவித்தனர். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு துப்பறிவாளன் 2 படத்துக்கான முதற்கட்ட ஷூட்டிங்கை லண்டனில் நடத்தி முடித்தார் மிஷ்கின். இதன்பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருந்த சமயத்தில் விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்... இதனால் தான் 'கோப்ரா' ப்ரோமோஷனில் கலந்து கொள்ளவில்லை..புதிய விளக்கம் தந்த இயக்குனர்
இதனால் அப்படத்தின் இருந்து மிஷ்கின் நீக்கப்படுவதாக அறிவித்தார் விஷால். ஒருகட்டத்தில் இது வார்த்தை மோதலாகவும் மாறியது. ஒருவரை ஒருவர் பட விழாக்களில் திட்டிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்க உள்ளதாக அறிவித்து அதிரடி காட்டினார் விஷால். ஆனால் அப்படம் அந்த அறிவிப்போடு நிற்கிறது. அதன்பின் எந்தவித அப்டேட்டையும் அவர் வெளியிடவில்லை.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒரு விழாவாக கொண்டாடினர். அதில் இயக்குனர் மிஷ்கினும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தான் பணியாற்றிய நடிகர்களில் மிகவும் ஒழுக்கமான நடிகர் என்றால் அது விஷால் தான் என கூறினார். அவருக்கு அடுத்தபடியாக உதயநிதியை சொல்வேன். அவரை முதன்முதலில் போடோஷூட் எடுத்தது நான் தான். எனது யுத்தம் செய் திரைப்படம் அவருக்காகத் தான் எழுதினேன். ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார்” என மிஷ்கின் தெரிவித்தார். அவர் இந்த விழாவில் விஷாலை பாராட்டி பேசியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... 3 மணிநேரத்திற்கு மேல் ரன்னிங் டைம்... சென்சார் அப்டேட்டை வெளியிட்ட விக்ரமின் ‘கோப்ரா’ டீம்