MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நண்பர்களோடு ஜாலியாக பைக் ட்ரிப் கிளம்பிய நடிகர் அஜித்! பைக்ல பஞ்ச் டயலாக்லாம் எழுதிருக்காரே - வைரலாகும் photos

நண்பர்களோடு ஜாலியாக பைக் ட்ரிப் கிளம்பிய நடிகர் அஜித்! பைக்ல பஞ்ச் டயலாக்லாம் எழுதிருக்காரே - வைரலாகும் photos

Ajith : நடிகர் அஜித் தனது நண்பர்களுடன் ஜாலியாக பைக் ட்ரிப் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

1 Min read
Author : Ganesh A
Published : Aug 28 2022, 09:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் எந்த வித பின்புலமும் இன்றி அறிமுகமாக தனது விடாமுயற்சியால் இன்று தலைசிறந்த நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது நடிப்பில் தற்போது ஏ.கே.61 திரைப்படம் தயாராகி வருகிறது. அஜித்தின் 61-வது படமான இதை எச்.வினோத் இயக்கி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இவர் இயக்கத்தில் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய அஜித், தற்போது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... சென்னையில் புதிதாக சொகுசு வீடு வாங்கிய நடிகர் விஜய்... அதன் விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

35

போனி கபூர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தை இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையில் இப்படம் வெளியாகலாம்.

45

இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது தனது நண்பர்களுடன் ஜாலியாக பைக் ட்ரிப் சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

55

அதில் அவர் ஓட்டிச் சென்ற பைக்கில் ‘Never Ever Give Up’ என்கிற ஸ்டிக்கரும் இடம்பெற்று உள்ளது. இது விவேகம் படத்தில் அவர் பேசிய பஞ்ச் டயலாக் ஆகும். சிவா இயக்கிய இப்படத்தில் நடிகர் அஜித், மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்து இருந்தார். இருப்பினும் இப்படம் பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் சேதுபதியின் உடன் பிறந்த சகோதரி ஜெயஸ்ரீயை யார் தெரியுமா? ஒரு தொழிலதிபரா.. பலரும் அறிந்திடாத தகவல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Venkat Prabhu : கோட் நம்பர் பிளேட்... முதல்வர் விஜய்-க்கு வெங்கட் பிரபு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்
Recommended image2
Karuppu : இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டு கருப்பு பட காட்சிக்கு கத்திரி போட்ட படக்குழு - பின்னணி என்ன?
Recommended image3
Ganja Karuppu : விபத்தில் உயிரிழந்த தம்பி... விஜய் அரசுக்கு கண்ணீருடன் கஞ்சா கருப்பு வைத்த கோரிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved