Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்..! வாசிம் ஜாஃபரின் அதிரடி தேர்வு
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (ஆகஸ்ட் 27) முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை (ஆகஸ்ட் 28ம்தேதி) துபாயில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார். அதன்படி ரோஹித் சர்மா - ராகுல் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார். கண்டிப்பாக ரோஹித்தும் ராகுலும் தான் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள்.
இதையும் படிங்க - ரோஹித் - டிராவிட்டின் ஸ்மார்ட்டான மூவ் இதுதான்! உலகின் தலைசிறந்த பவுலருக்கு கம்பேக் வாய்ப்பு- சக்லைன் முஷ்டாக்
3ம் வரிசையில் விராட் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ம் வரிசையில் ஹர்திக் பாண்டியாவையும் தேர்வு செய்துள்ளார்.
விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவரை வாசிம் ஜாஃபர் திடமாக முடிவு செய்யவில்லை. ஒருவேளை ரிஷப் பண்ட் ஆடினால் அவர் 5ம் வரிசையில் பேட்டிங் ஆடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
3 ஸ்பின்னர்கள், 2 ஃபாஸ்ட் பவுலர்களை தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃபர். ஜடேஜா, சாஹல், ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.
இதையும் படிங்க - ஷாஹீன் அஃப்ரிடி இல்லைனா என்ன? இவங்க 3 பேரும் சேர்ந்து இந்திய வீரர்களை மிரட்டி விட்ருவாங்க - சக்லைன் முஷ்டாக்
ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃபர்.
வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்/தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.