சூப்பர் ஆஃபர்..! 50 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் !!

புதிதாகக் கடை திறப்பவர்கள் சிறப்புச் சலுகைகள் அறிவிப்பது வழக்கம். 

Amazing offer of biryani here for 50 paisa at karur

பிரியாணி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பிரியாணி என்று நினைத்தாலே நம் மனதில் பிரியாணியின் மனமும், சுவையும் வந்துபோகும். அப்படி நாவில் எச்சில் ஊற வைக்கும் பிரியாணியை விரும்பாத அசைவ பிரியர்கள் கிடையாது. டெல்லியின் முகலாய மன்னர்கள் காலம் முதல் தற்போதுள்ள ஆம்பூர் பிரியாணி வரை அனைவரும் பிரியாணி பிரியர்களாகவே இருக்கிறார்கள். 

Amazing offer of biryani here for 50 paisa at karur

மேலும் செய்திகளுக்கு..வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க இது செய்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு !

புதிதாகக் கடை திறப்பவர்கள் சிறப்புச் சலுகைகள் அறிவிப்பது வழக்கம். அதிலும் உணவகம் திறப்பவர்கள் விதவிதமான அறிவிப்புகளை வெளியிட்டு விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பார்கள். அதுவும் தற்போது பெரும்பாலும் புழக்கத்தில்  50 பைசா, 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்குவதை டிரெண்டாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் கரூரில் உள்ள சிக்கன் பிரியாணி கடையும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டது.

கரூர் காந்தி கிராமம் அருகே தனியார் அசைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பிரியாணி தொடங்கப்பட்டு ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் உணவக உரிமையாளர் ஒரு யோசனையை செயல்படுத்தியுள்ளார். அதன்படி கடைக்கு 50 பைசா நாணயத்தை கொண்டு வந்தால் அவர்களுக்கு சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்று அசத்தலான அறிவிப்பை அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..ஜார்கண்ட் எம்.எல்.ஏக்கள் மாயம் - முதல்வராகும் மனைவி ? பாஜக வலையில் சிக்குவாரா ஹேமந்த் சோரன் ?

Amazing offer of biryani here for 50 paisa at karur

 50 பைசா நாணயத்தை எடுத்துக் கொண்டு வந்து உணவக வாசலில் குவிந்தனர். அதிகமான மக்கள் 50 பைசா நாணயத்தை எடுத்து வந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், கடை முன்பு திரண்டு நின்ற கூட்டத்தை சீர செய்து அங்கேயே காத்திருந்தனர். 

நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமாகி கொண்டே போனதால், போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இனிமேல் இதுபோன்ற அறிவிப்புகள் ஏதேனும் அறிவிக்கப்படும் பட்சத்தில் கண்டிப்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர். இதனால் அந்த இடம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios