ஜார்கண்ட் எம்.எல்.ஏக்கள் மாயம் - முதல்வராகும் மனைவி ? பாஜக வலையில் சிக்குவாரா ஹேமந்த் சோரன் ?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் தமது பெயரில் சுரங்க ஒதுக்கீடு பெற்றிருந்தார் ஹேமந்த் சோரன். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் மனு கொடுத்தது.
இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை பறிக்கும் பரிந்துரையை ஜார்க்கண்ட் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவி பறிபோகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே தம்மை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஹேமந்த் சோரன் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் ராஞ்சி திரும்பினார்.
மேலும் செய்திகளுக்கு..வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க இது செய்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு !
தகுதி நீக்க நோட்டீஸை அரசு அறிவிப்பாணையில் ஆளுநர் வெளியிட்டதும், முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், அவர் இடைத்தேர்தல் மூலம் 6 மாதங்களுக்குள் மீண்டும் தேர்ந்தெடுக்கபட முடியும். இது தொடர்பாக பேசிய முதல்வர் ஹேமந்த் சோரன் கூறுகையில், தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரை அப்படியே பாஜகவினர் எழுதியதைப் போலவே இருக்கிறது.
ஆளுநர் இன்னமும் எனக்கு அந்த பரிந்துரையை அனுப்பவும் இல்லை. அது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மத்திய அரசும், பாஜகவும் எப்படிபட்ட ஒரு மோசமான சூழலை உருவாக்கினாலும் பரவாயில்லை. நாங்கள் பயப்பட வேண்டியவர்கள் அல்ல, போராட வேண்டியவர்கள், பயம் எங்கள் டி.என்.ஏவில் இல்லை. அரசியல் ரீதியாக எங்களுடன் போட்டியிட முடியாமல், எதிரிகள் அரசியலமைப்பு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துகின்றனர்’ என்று கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி, முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஆளுநரின் உத்தரவுக்குப்பின், அவர் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளார்.தார்மீக அடிப்படையில் முதல்வர் ஹேமந்த் சோரன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ள பாஜக., சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என ஒருபக்கம் பாஜக கேள்வி எழுப்பி வருகிறது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் 82 உறுப்பினர்கள் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”
இதில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சிக்கு 30 எம்எல்ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 17 உறுப்பினர்களும் உள்ளனர். முக்கிய எதிர்க்கட்சியான பாஜக.,வுக்கு 25 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குதிரை பேரத்தை தடுக்க ஜே.எம்.எம் கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் 2 பஸ்களில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் மேற்கு வங்கம் அல்லது சட்டீஸ்கரில் தங்க வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஹேமந்த், தனது எம்எல்ஏ பதவியை இழக்க நேரிட்டால் முதல்வர் பதவியும் பறிபோகலாம். எனவே, ஹேமந்த் அடுத்தகட்ட நடவடிக்கையாக தனது மனைவி கல்பனா சோரனை முதல்வராக்க திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜார்கண்ட் அரசியல் சூழ்நிலை திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..“ஆப்ரேசன் லோட்டஸ்.. 277 எம்எல்ஏக்கள், 5,500 கோடி.. பாஜகவை வெளுத்து வாங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் !”