இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:59 PM (IST) Oct 28
Srinidhi Shetty and Archana Jois கன்னட சினிமாவை பான்-இந்தியா அளவில் பிரபலமாக்கிய திரைப்படம் கே.ஜி.எஃப். இந்த படத்தில் திரையில் ஒருபோதும் ஒன்றாக தோன்றாத மாமியார்-மருமகள், நிஜத்தில் ஒன்றாக இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
11:35 PM (IST) Oct 28
தவெக தலைவர் விஜய் அறிக்கை, 8வது ஊதியக் குழு அறிவிப்பு, டிரம்பின் புதிய விதிகள், எலான் மஸ்கின் க்ரோகிபீடியா உள்ளிட்ட இன்றைய TOP 10 செய்திகளை அறிந்துகொள்ளுங்கள்.
10:39 PM (IST) Oct 28
IND vs AUS 1st T20: நாளை நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் என்ன? ஹர்சித் ராணாவுக்காக வாய்ப்பை இழக்கும் ஸ்டார் பவுலர் யார்? என்பது குறித்து பார்ப்போம்.
10:23 PM (IST) Oct 28
இந்தியாவின் HAL மற்றும் ரஷ்யாவின் PJSC-UAC நிறுவனங்கள் இணைந்து SJ-100 ரக பயணிகள் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த கூட்டு முயற்சி இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் தற்சார்புக்கான ஒரு முக்கிய படியாகவும் அமைகிறது.
10:05 PM (IST) Oct 28
Schools Holiday in Thanjavur: மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
09:48 PM (IST) Oct 28
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு, 33 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
09:48 PM (IST) Oct 28
Tourist Family Director Receives BMW car: 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான் கார் பரிசாக வழங்கியுள்ளார்.
09:14 PM (IST) Oct 28
Bigg Boss Tamil Wild Card Entry : பிக்பாஸ் தமிழ் சீசன் 9ல் வைல்டு கார்டு எண்ட்ரியாக வரும் நடிகை சாண்ட்ரா எமியின் புரோமோ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
09:12 PM (IST) Oct 28
Budget Phone AI டேட்டா சென்டர்களின் தேவை காரணமாக சில்லுகள் பற்றாக்குறை ஏற்பட்டு, பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் விலை அடுத்த காலாண்டில் உயர வாய்ப்புள்ளது. உற்பத்தியாளர்கள் விலையை வாடிக்கையாளர்களிடம் ஏற்ற உள்ளனர்.
09:11 PM (IST) Oct 28
உயர்கல்வித்துறையில் திமுக அரசு துக்ளக் தர்பார் நடத்துவதாக அதிமுக அமைப்புச் செயலாளர் கே.பி. அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக அரசு தான்தோன்றித்தனமான செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
09:10 PM (IST) Oct 28
ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர்கள் மகாராஜன் ஆறுமுகப்பாண்டியன், எட்வினா ஜேசன் இரட்டை வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
09:02 PM (IST) Oct 28
Top 5 Free AI Tools ChatGPT, Gemini, Kling AI உட்பட உங்கள் படைப்பாற்றலை அதிகரிக்கும் டாப் 5 இலவச AI கருவிகள் இங்கே! கன்டென்ட், எழுத்து, படம், வீடியோ உருவாக்க இதோ வழிகள்.
08:56 PM (IST) Oct 28
ChatGPT Study Mode சாட்ஜிபிடி, இந்திய மாணவர்களுக்குத் தேர்வுக்குத் தயாராக உதவும் "Chats for college students in India" என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் ஃபைல்களை அப்லோட் செய்து கற்றுக்கொள்ளலாம்.
08:38 PM (IST) Oct 28
Sainik School சனிக் பள்ளி 6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு (AISSEE 2026) விண்ணப்பிக்க அக்டோபர் 30 மாலை 5 மணிதான் கடைசி நாள். தேர்வு ஜனவரி 2026-ல் நடைபெறும்.
08:30 PM (IST) Oct 28
Public Exam Date தமிழ்நாடு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2026 கால அட்டவணை நவம்பர் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு. சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தேதிகள் முடிவு. CBSE தேதிகளும் அறிவிப்பு.
08:17 PM (IST) Oct 28
TN Assistant Professor தமிழ்நாடு உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி! பணி அனுபவச் சான்றிதழ்களை (Annexure IV, V, VI) பதிவேற்றம் செய்ய நவம்பர் 30, 2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
08:13 PM (IST) Oct 28
எலான் மஸ்கின் xAI நிறுவனம், விக்கிபீடியாவிற்குப் போட்டியாக 'க்ரோகிபீடியா' என்ற AI கலைக்களஞ்சியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விக்கிபீடியாவைப் போன்றே இருந்தாலும், பல கட்டுரைகள் அங்கிருந்து நகலெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
08:08 PM (IST) Oct 28
Railway Recruitment 2025 இந்திய ரயில்வேயில் 3058 கிளார்க் பணியிடங்கள் (டிக்கெட் கிளார்க், ஜூனியர் கிளார்க்) அறிவிப்பு! சம்பளம் ரூ.21,700 முதல். நவம்பர் 27, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
08:08 PM (IST) Oct 28
செஸ் போட்டியில் சில மாதங்களுக்கு முன்பு தன்னை அசிங்கப்படுத்திய அமெரிக்க வீரருக்கு அன்பு மூலம் பதிலடி கொடுத்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த குகேஷ். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
08:02 PM (IST) Oct 28
பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒவ்வொருத்தருடைய முகத்திரையையும் வச்சு கிழிக்க போகிறேன் என்று வைல்டு கார்டு எண்ட்ரியாக வரும் பிரஜின் வார்னிங் கொடுத்துள்ளார்.
07:30 PM (IST) Oct 28
07:02 PM (IST) Oct 28
அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனது சுயலாபத்திற்காக கோஷ்டிகளை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இது உள்ளூர் திமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என அஞ்சுகின்றனர்.
07:02 PM (IST) Oct 28
தவெகவில் 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் யார் யார் இடம்பெற்றுள்ளனர்? என்பது குறித்து பார்ப்போம்.
06:23 PM (IST) Oct 28
நாங்கள் இங்கிருந்து போய் பார்க்க வேண்டும் என்று அவசியமே கிடையாது. நீ யாருடா போடா என்று வீட்டில் படுத்து இருக்கலாம். ஒரு மனிதாபிமான அடிப்படையில் நம்மளை அங்கிருந்து கூப்பிட்டு இருக்கிறார்கள். நிச்சயமாக போகலாம். போய் பார்த்துவிட்டு வரலாம்.
06:21 PM (IST) Oct 28
Kamarudin Ex Girlfriend Set for Bigg Boss Wild Card Entry: பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்வது உறுதியாகி உள்ளது.
06:12 PM (IST) Oct 28
திமுக அரசு நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி விவாதத்திற்கு அழைத்திருந்த நிலையில், அதனை பாமக தலைவர் அன்புமணி ஏற்றுக் கொண்டுள்ளார். விவாதத்திற்கு நான் ரெடி என்று கூறியுள்ளார்.
05:53 PM (IST) Oct 28
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 8வது ஊதியக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு, 18 மாதங்களுக்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.
05:33 PM (IST) Oct 28
குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக கோவை வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டினார்கள். இதற்கு சி.பி.ராதாகிருஷ்ணனே விளக்கம் அளித்தார்.
05:18 PM (IST) Oct 28
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகாரில் 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்குச் சட்டத்தில் இருந்து கள்ளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
04:42 PM (IST) Oct 28
Today Rasi Palan : அக்டோபர் 29, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:40 PM (IST) Oct 28
மத்திய அமைச்சரவை எட்டாவது ஊதியக் குழுவின் விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களைப் பாதிக்கும்.
04:40 PM (IST) Oct 28
’இரட்டை வாக்காளர் அடையாள அட்டை சிறிய விஷயம் அல்ல. ஒரு கொடூரமான குற்றம் கிஷோர் பீகார் தேர்தலை குறைமதிப்பிற்கு உட்படுத்த திரினாமுல் காங்கிரஸுடன் மோசமான சதி செய்துள்ளார்’
04:39 PM (IST) Oct 28
Today Rasi Palan : அக்டோபர் 29, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:39 PM (IST) Oct 28
இந்த ஆண்டின் மிக சக்திவாய்ந்த புயலான 'மெலிசா' சூறாவளியின் மையத்திற்குள் அமெரிக்க விமானப் படையின் 'ஹரிகேன் ஹண்டர்ஸ்' நுழைந்துள்ளனர். ஜமைக்காவை அச்சுறுத்தும் இந்த புயல், மணிக்கு 282 கி.மீ. வேகத்தில் பேரழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
04:36 PM (IST) Oct 28
Today Rasi Palan : அக்டோபர் 29, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:36 PM (IST) Oct 28
Sunitha Quits Anna Serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் இருந்து, ரத்னா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுனிதா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக யார் நடிக்க உள்ளார் என்கிற விவரம் வெளியாகி உள்ளது.
04:34 PM (IST) Oct 28
கிராமப்புற தேவை மற்றும் குறிப்பிடத்தக்க விலை குறைப்புகளால் சிறிய ரக கார்களின் முன்பதிவும் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த உயர்வு தற்காலிகமானது மற்றும் சலுகைகளைச் சார்ந்தது.
04:33 PM (IST) Oct 28
Today Rasi Palan : அக்டோபர் 29, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:31 PM (IST) Oct 28
Today Rasi Palan : அக்டோபர் 29, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:28 PM (IST) Oct 28
Chennai Corporation: பெருநகர சென்னை மாநகராட்சி, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 215 நிவாரண மையங்கள், 701 மருத்துவ முகாம்கள், 1,496 மோட்டார் பம்புகள் மற்றும் 22,000 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.