MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AUS 1st T20.. ஹர்சித் ராணாவுக்காக கழட்டி விடப்படும் 'ஸ்டார்' பவுலர்! இந்திய அணி பிளேயிங் லெவன்!

IND vs AUS 1st T20.. ஹர்சித் ராணாவுக்காக கழட்டி விடப்படும் 'ஸ்டார்' பவுலர்! இந்திய அணி பிளேயிங் லெவன்!

IND vs AUS 1st T20: நாளை நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் என்ன? ஹர்சித் ராணாவுக்காக வாய்ப்பை இழக்கும் ஸ்டார் பவுலர் யார்? என்பது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 28 2025, 10:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடர்
Image Credit : Getty

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயனம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் ஓடிஐ தொடரை 2 1 என்ற கணக்கில் இந்திய அணி பறிகொடுத்தது. இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?
Image Credit : ANI

வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

இதில் முதலாவது டி20 போட்டி நாளை (புதன்கிழமை) கான்பெராவில் நடைபெற உள்ளது. ஓடிஐ தொடரை இழந்ததால் முதல் டி20 போட்டியை இந்திய அணி வெற்றியுடன் தொடங்க முயற்சிக்கும். அண்மையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 வடிவில் நடந்த ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. கிட்டத்தட்ட அதே அணி தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் களமிறங்குகிறது.

இந்திய அணி பேட்டிங் ஆர்டர் எப்படி?

இதில் நாளை நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் வழக்கம்போல் ஓப்பனிங்கில் களமிறங்குவார்கள். ஒன் டவுனில் திலக் வர்மா, அதன்பின்பு கேப்டன் சூர்யகுமார் யாதவ், மிடில் வரிசையில் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே களமிறங்க உள்ளனர். இதன் பிறகு அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் களமிறங்குவார்கள்.

34
ஹர்சித் ராணாவுக்காக இடத்தை இழக்கும் சூப்பர் பவுலர்
Image Credit : Twitter

ஹர்சித் ராணாவுக்காக இடத்தை இழக்கும் சூப்பர் பவுலர்

ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரை அக்சர், வாஷிங்டன் உடன் குல்தீப் யாதவ்வும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை. பாஸ்ட் பவுலிங்கை பொறுத்தவரை பும்ராவுடன், கம்பீருக்கு பிடித்த வீரரான ஹர்சித் ராணா கைகோர்க்க வாய்ப்பு இருப்பதால் சிறந்த டி20 பவுலரான அர்ஷ்தீப் சிங்குக்கு இடம் கிடைப்பது கஷ்டம் தான்.

44
இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்
Image Credit : INSTAGRAM/indiancricketteam

இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்

அப்படி ஒருவேளை பாஸ்ட்டுக்கு சாதகமான பிட்ச் அமைந்தால் குல்தீப் யாதவ் கழட்டி விடப்பட்டு அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்படுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் அல்லது குல்தீப் யாதவ்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!
Recommended image2
India Vs West Indies: ரோஹித், கோலி ரிட்டர்ன்ஸ்! 6 பேருக்கு கல்தா; அகர்கர் போட்ட அதிரடி
Recommended image3
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Related Stories
Recommended image1
இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டி தொடங்கும் நேரம்? முழு விவரம்!
Recommended image2
Shreyas Iyer: ஷ்ரேயாஸ் உயிருக்கு ஆபத்தா? உடல்நிலை எப்படி இருக்கு? பிசிசிஐ முக்கிய அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved