- Home
- Sports
- Sports Cricket
- இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டி தொடங்கும் நேரம்? முழு விவரம்!
இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டி தொடங்கும் நேரம்? முழு விவரம்!
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டி தொடங்கும் நேரம் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடர்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயனம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் விளையாடி முடித்து விட்டது. அதில் பெர்த்தில் நடந்த முதல் ஓடிஐயிலும், அடிலெய்டில் நடந்த 2வது ஓடிஐயிலும் தோற்ற இந்திய அணி தொடரை இழந்தது. அதே வேளையில் சிட்னில் நடந்த 3வது ஓடிஐயில் மெகா வெற்றி பெற்றது. இந்த அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
டி20 தொடர் முழு அட்டவணை
இதில் முதலாவது டி20 போட்டி வரும் 29ம் தேதி (புதன்கிழமை) கான்பெராவில் நடைபெறுகிறது. 2வது டி20 போட்டி மெல்போர்னின் 31ம் தேதியும் (வெள்ளிக்கிழமை), 3வது போட்டி ஹோபார்ட்டில் நவம்பர் 2ம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), 4வது போட்டி கோல்ட் கோஸ்ட் மைதானத்தில் நவம்பர் 6ம் தேதியும் (வியாழக்கிழமை), 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் நவம்பர் 8ம் தேதியும் (சனிக்கிழமை) நடைபெற உள்ளன.
போட்டி தொடங்கும் நேரம்? எந்த டிவியில் பார்க்கலாம்?
இந்தியா, ஆஸ்திரேலியா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம். இந்திய நேரப்படி போட்டி தொடங்கும் நேரம் குறித்து பார்ப்போம்.
இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்?
இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் பார்க்கலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் தமிழ் வர்ணனையுடன் போட்டிகளை கண்டு ரசிக்கலாம்.
இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடரை ஓடிடியில் பார்க்கலாமா?
இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 போட்டிகள் எத்தனை மணிக்கு தொடங்கும்?
இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி நண்பகல் 1.45 மணிக்கு தொடங்கும். அதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக அதாவது நண்பகல் 1.15 மணிக்கு டாஸ் போடப்படும்.
இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 அணிகள்
இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் மற்றும் ரிங்கு சிங்.
ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்ட்மேன் டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னேமன், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.