- Home
- Sports
- Sports Cricket
- Shreyas Iyer: ஷ்ரேயாஸ் உயிருக்கு ஆபத்தா? உடல்நிலை எப்படி இருக்கு? பிசிசிஐ முக்கிய அப்டேட்!
Shreyas Iyer: ஷ்ரேயாஸ் உயிருக்கு ஆபத்தா? உடல்நிலை எப்படி இருக்கு? பிசிசிஐ முக்கிய அப்டேட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருபோள் போட்டியில் கேட்ச் பிடித்தபோது விலா எலும்பில் காயம் அடைந்து ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை குறித்து பிசிசிஐ அப்டேட் வெளியிட்டுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு கடுமையான காயம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது அலெக்ஸ் கேரியின் கேட்ச்சை அட்டகாசமாக பிடித்த இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. அதாவது கேரியின் கேட்ட்சை பின்னோக்கி ஓடிச்சென்று சூப்பராக பிடித்த ஷ்ரேயாஸ் கீழே விழுந்தபோது அவரது இடது விழா எழும்பில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார்.
ஐசியூவில் தீவிர சிகிச்சை
ஆனால் தொடர்ந்து அவர் வலியால் துடித்ததால் உடனடியாக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஷ்ரேயாஸ் ஐயருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஷ்ரேயாஸ் இடது கீழ் விலா எலும்புக் கூட்டில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் பரிசோதனையில் அவரது மண்ணீரலில் கிழிசல் காயம் இருப்பது தெரியவந்துள்ளது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
ஷ்ரேயாஸ் உடல்நிலை எப்படி இருக்கு?
"அக்டோபர் 25, 2025 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது ஃபீல்டிங் செய்தபோது ஷ்ரேயஸ் ஐயரின் இடது கீழ் விலா எலும்புக் கூட்டுப் பகுதியில் தாக்கத்தினால் காயம் ஏற்பட்டது. மேலதிக மதிப்பீட்டிற்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்" என்று பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிசிசிஐ கொடுத்த அப்டேட்
"ஸ்கேன் பரிசோதனையில் மண்ணீரலில் கிழிசல் காயம் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் சிகிச்சையில் இருக்கிறார். மருத்துவ ரீதியாக சீராக இருக்கிறார். மேலும் நன்றாக குணமடைந்து வருகிறார்.
சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, பிசிசிஐ மருத்துவக் குழு அவரது காயத்தின் நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்திய அணி மருத்துவர், ஷ்ரேயஸுடன் சிட்னியில் தங்கி அவரது தினசரி முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வார்" என்று பிசிசிஐ மேலும் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சூப்பராக விளையாடிய ஷ்ரேயாஸ்
களத்தில் பீல்டிங் செய்தபோது ஷ்ரேயாஸ் கடுமையான காயம் அடைந்தது இந்திய அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் நிலை குறித்து அறிந்த அவரது பெற்றோர் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரின்போது, ஷ்ரேயாஸ் இரண்டு ஆட்டங்களில் 72 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டாவது அடிலெய்டு ஒருநாள் போட்டியில் 77 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து சூப்பராக விளையாடியது குறிப்பிடத்தக்கது.