ஸ்ரேயாஸ் ஐயர் ICUவில் அனுமதி.. ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட சோகம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆஸி.க்கு எதிரான போட்டியில் காயம்
கடந்த சனிக்கிழமை ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில், ஆஸ்திரேலியா, இந்தியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. போட்டியின் போது பேக்வேர்ட் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், அலெக்ஸ் கேரி அடித்த பந்த பின் பக்கமாக ஓடி சென்று அபாயகரமான முறையில் கேட்ச் பிடித்து அசத்தனார்.
ஸ்ரேயாஸ் பிடித்த அசாத்திய கேட்ச்
ரசிகர்கள் அனைவரும் வாயைப் பிளக்கும் அளவிற்கு இந்த கேட்ச் அமைந்த நிலையில் டைவ் அடித்த ஸ்ரேயாஸ்க்கு விலா பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. மைதானத்திலேயே கதறித் துடித்த அவரை இந்திய அணியின் மருத்துவர்கள் பரிசோதித்தது முதல் உதவி அளிக்க முயன்றனர். ஆனால் அவருக்கு காயத்தின் வலி தொடர்ந்து அதிகரித்ததைத் தொடர்ந்து உடனடியாக அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ICUவில் ஸ்ரேயாஸ்
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். விலா எழும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது உடலில் தொடர்ந்து ரத்தக்கசிவு இருப்பதால் அவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயம் குணமடைவது எப்பொது..?
காயத்தால் அவதிப்படும் ஸ்ரேயாஸ் அடுத்த 3 வாரங்களில் காயத்தில் இருந்து மீண்டு வருவார் என நம்புவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஸ்ரேயாஸின் தீவிர காயம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.