- Home
- Sports
- Sports Cricket
- சொந்த ஊரில் மண்ணை கவ்விய ஆஸி. வீரர்கள்.. அதிரடி காட்டிய ரோகித், கோலி ஜோடி.. இந்தியா இமாலய வெற்றி
சொந்த ஊரில் மண்ணை கவ்விய ஆஸி. வீரர்கள்.. அதிரடி காட்டிய ரோகித், கோலி ஜோடி.. இந்தியா இமாலய வெற்றி
Virat Kohli, Rohit Sharma | இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தி உள்ளது.

டாஸ்ல் கோட்ட விட்ட இந்தியா
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்றது. வழக்கம் போல இந்த போட்டியிலும் இந்தியா டாஸ்ஸில் தோல்வியைத் தழுவியது. இது இந்திய அணி தொடர்ச்சியாக 18வது முறையாக டாஸ் தோற்கும் போட்டியாகும்.
பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸி.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணிக்கு இன்றைய தினம் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று சொல்லலாம். மேட் ரென்ஷா மட்டும் அரைசதம் கடந்து 56 ரன்கள் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஃபெவிலியன் திரும்பினர். பந்துவீச்சில் ஆக்ரோஷம் காட்டிய இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களைத் தினறடித்தனர். இறுதியில் 46.4 ஓவர் முடிவில் அந்த அணி 236 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தது.
இந்தியா சார்பில் ஹர்ஷித் ராணா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆஸி.யை தூசி தட்டிய இந்திய வீரர்கள்
இதனைத் தொடர்ந்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. ஹிட்மேன் ரோகித் ஷர்மா, கேப்டன் சுப்மன் கில் இந்திய அணியின் ரன் கணக்கைத் தொடங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் சுப்மன் கில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித், விராட்
கில் அவுட்டானதும் களம் இறங்கிய கோலி இந்த தொடரில் தனது முதல் ரன்னை பதிவு செய்ததும் நிம்மதி பெருமூச்சிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி பவுண்ட்ரிகளைத் தவிர்த்து ஒவ்வொரு ரன்னாக சேர்க்கத் தொடங்கினார்.
மறு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து கோலியும் அரை சதம் கடந்தார்.
சதம் விளாசிய ரோகித்
தொடர்ந்து அதிரடி காட்டிய ஹிட்மேன் ரோகித் ஒருநாள் போட்டியில் தனது 33வது சதத்தைப் பதிவு செய்தார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்த விராட், ரோகித் இணை இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 38.3 ஓவர் முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் தொடர் 2.1 என்ற கணக்கில் நிறைவு பெற்றது.