- Home
- Sports
- Sports Cricket
- விரக்தியில் வார்த்தையை விட்ட ஷ்ரேயாஸ்..! சட்டென சமாதானப்படுத்தி கேப்டன் பதவியை கொடுத்த பிசிசிஐ!
விரக்தியில் வார்த்தையை விட்ட ஷ்ரேயாஸ்..! சட்டென சமாதானப்படுத்தி கேப்டன் பதவியை கொடுத்த பிசிசிஐ!
ஆசியக் கோப்பை அணியில் இடம்பெறாத ஷ்ரேயாஸ் ஐயர், இந்திய ஏ அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை அணியில் ஷ்ரேயாஸ் இல்லை
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் நாளை தொடங்குகிறது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படாதது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியில் ஒருவராக இருந்த போதிலும் ஷ்ரேயாஸை அணியில் எடுக்காமல் விட்டதற்கு ரசிகர்கள் பிசிசிஐக்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் விரக்தி
இந்நிலையில், இந்திய அணியில் சேர்க்கப்படாததற்கு ஷ்ரேயாஸ் ஐயர் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். 'நீங்கள் அணியில் விளையாட தகுதியானவர் இல்லை என்று நீங்கள் உணரும்போது ஏமாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அதே நேரத்தில், மற்றொரு வீரர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அணிக்காக தனது சிறந்ததைக் கொடுத்தால், நீங்கள் அவரை ஆதரிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இறுதி இலக்கு அணியின் வெற்றி. அணி வெற்றி பெறும்போது, அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் உங்கள் வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும்'' என்று ஷ்ரேயாஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமனம்
அணியில் இடம் கிடைக்காத விரக்தியி ஷ்ரேயாஸ் ஐயர் பேசிய நிலையில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டு நாள் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாதம் 16 ஆம் தேதி லக்னோவில் தொடங்கும் தொடரின் இரண்டாவது போட்டி செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் ஏ அணியில் உள்ளனர். இருப்பினும், கருண் நாயர் அணியில் சேர்க்கப்படவில்லை.
கே.எல். ராகுலும் விளையாடுகிறார்
சாய் சுதர்ஷன், துருவ் ஜூரல், பிரசித் கிருஷ்ணா, அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் பலர் அணியில் உள்ளனர். துருவ் ஜூரல் துணை கேப்டன். உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட ஹர்ஷ் துபே, ஆயுஷ் படோனி, தனுஷ் கோடியன் மற்றும் மானவ் சுதர் ஆகியோரும் அணியில் உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய கே.எல். ராகுல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் முதல் போட்டிக்கு அணியில் இல்லை, ஆனால் இரண்டாவது போட்டிக்கு அணியில் உள்ளனர். காயத்திலிருந்து மீண்டுள்ள நிதிஷ் குமார் ரெட்டி அணிக்குத் திரும்பியுள்ளார். காயமடைந்த சர்பராஸ் கான் பரிசீலிக்கப்படவில்லை.
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய தொடர்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, ஷ்ரேயாஸ் ஏ அணியின் தலைவராக நியமிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஷ்ரேயாஸ் கடைசியாக இந்தியாவுக்காக பிப்ரவரி 2024 இல் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டு நாள் போட்டிகளுக்குப் பிறகு, செப்டம்பர் 30 முதல் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.