ஒரிஜினல் கேம், ஃபேக் கேம் – கட்டம் கட்ட வரும் வைல்டு கார்டு எண்ட்ரி – இதோ புரோமோ வீடியோ!
Bigg Boss Tamil Wild Card Entry : பிக்பாஸ் தமிழ் சீசன் 9ல் வைல்டு கார்டு எண்ட்ரியாக வரும் நடிகை சாண்ட்ரா எமியின் புரோமோ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 9:
விஜய் டிவியில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. வெற்றிகரமாக 8 சீசன் முடிவடைந்துள்ள நிலையில், 9-ஆவது சீசன் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி துவங்கியது. கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை நேர்த்தியாக தொகுத்து வழங்கிய, விஜய் சேதுபதி தான் இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
அள்ளும் கை தட்டல்கள்:
அதே போல் கடந்த முறை விஜய் சேதுபதி... போட்டியாளர்கள் பதில் பேசுவதற்கு கூட நேரம் கொடுப்பதில்லை என்பது போன்ற சில விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அந்த பழக்கத்தை மாற்றி கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. விஜய் சேதுபதி ஒவ்வொரு வாரமும் தன்னுடைய கேள்வியை சாட்டையை சுழற்றும் போது கை தட்டல்களும் அள்ளுகிறது.
இதுவரை வெளியேறிய போட்டியாளர்கள்:
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதல் நாளே 20 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தனர். இவர்களில், முதல் வாரத்தில் இயக்குனர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து கடந்த வாரம் திருநங்கை போட்டியாளரான அபிசாரா வெளியேறினார். இவர்கள் இருவரும் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டாலும், ஆர் ஜே நந்தினி இனி தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது. இங்கு இருப்பவர்கள் அனைவருமே பொய்யாக இருக்கிறார்கள் என கூறிவிட்டு தானாக முன்வந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
வைல்டு கார்டு என்ட்ரி:
பிக்பாஸ் சீசன் 9 வெற்றிகரமாக 23 நாட்களை கடந்து விட்ட நிலையில்... இந்த முறை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வர உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு இருக்காது என கூறப்பட்ட நிலையில், தற்போது கணவன் - மனைவியாக சேர்ந்து இரு போட்டியாளர்கள் உள்ளே வர உள்ளார்களாம்.
நட்சத்திர தம்பதி:
மக்களுக்கு மிகவும் பரிச்சியமான அந்த இரண்டு முகங்கள் யார் யார் தெரியுமா. தொகுப்பாளராக இருந்து, சீரியல் நடிகராக மாறி, பின்னர் சில திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ள ப்ரஜின் மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான சாண்ட்ராவுடம் தான். விஜய் டிவியில் பல ஹிட் தொடர்களில் நடித்துள்ள பிரஜின் பிக்பாஸ் வீட்டின் உள்ளே தன்னுடைய மனைவியோடு வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
சாண்ட்ரா எமி
இது குறித்து இருவரது புரோமோ வீடியோ வெளியாகி வரும் நிலையில் சாண்ட்ரா எமி கூறியிருப்பதாவது: கேம் விளையாடுகிறேன் என்று உள்ளே வந்து ஒரு சிலரை வைத்து இவர்கள் விளையாடும் ஆட்டத்தை தாங்க முடியவில்லை. இதில் ஒரிஜினல் கேம் எது, ஃபேக் கேம் எது என்று ரிவீல் பண்ண வேணாமா, இந்த டிராமாவுக்கு எல்லாம் எண்டு கார்டு போட நான் உள்ளே வருகிறேன் என்று கூறுகிறார். இந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது. இதே போன்று பிரஜின் பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது.