’இரட்டை வாக்காளர் அடையாள அட்டை சிறிய விஷயம் அல்ல. ஒரு கொடூரமான குற்றம் கிஷோர் பீகார் தேர்தலை குறைமதிப்பிற்கு உட்படுத்த திரினாமுல் காங்கிரஸுடன் மோசமான சதி செய்துள்ளார்’
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பீகார், மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, அரசியல் வியூகவாதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிசோர் மூன்று நாட்களுக்குள் தனது பதிலைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்காளத்தில் இரட்டை வாக்காளர் பதிவுகள் தொடர்பாக பிரசாந்த் கிஷோரின் குழு தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டுகிறது.
பீகார் அரசியல் அரங்கில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ள ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர், ‘‘மக்கள் "தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பார்கள்" என்று நம்பிக்கை கொண்டுள்ளார். அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்கத்தில் 121, காளிகாட் சாலையில் சேர்ந்துள்ளார். இது முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதி. இது கொல்கத்தாவின் பபானிபூர் தொகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைமையகத்தின் முகவரி. அவரது வாக்குச் சாவடி பி ராணிசங்கரி பாதையில் உள்ள செயிண்ட் ஹெலன் பள்ளி என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, பிரசாந்த் கிஷோர் திரிணாமுல்காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினார். கிஷோர் தனது சொந்த ஊரான பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள கர்கஹார் சட்டமன்றத் தொகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளார். அவரது வாக்குச் சாவடி கோனாரில் உள்ள மத்திய வித்யாலயா என்று என்று தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒரு தனிநபரை ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராகப் பதிவு செய்வதைத் தடைசெய்யும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிரிவு 17 ஐ தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஒரே தொகுதிக்குள் பல உள்ளீடுகளைத் தடுக்கும் பிரிவு 18 ஐயும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சட்டத்தின் கீழ், வசிக்கும் இடத்தை மாற்றும் ஒருவர் புதிய தொகுதியில் சேர்க்க படிவம் 8 மூலம் விண்ணப்பிக்க வேண்டும், முந்தைய வாக்காளர் பட்டியலில் இருந்து தங்கள் பெயர் நீக்கப்படும் என்று அறிவிக்க வேண்டும்.
![]()
இந்த சர்ச்சைக்கு பதிலளித்த ஜன் சுராஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குமார் சௌரப் சிங், ‘‘இந்த விஷயம் தேர்தல் ஆணையத்தின் குறைபாட்டை பிரதிபலிக்கிறது. பீகாரில் SIR-ஐ மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கியது. பல பெயர்கள் நீக்கப்பட்டன. பிரசாந்த் கிஷோர் போன்ற நன்கு அறியப்பட்ட ஆளுமையின் விஷயத்தில் அவர்கள் ஒரு குறைபாட்டிற்கு இடமளிக்கும்போது, வேறு இடங்களில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை எப்படி இருக்கும் என கற்பனை செய்து கொள்ளுங்கள்’’ என அவர் தெரி்வித்துள்ளார்.
ஆனாலும், பீகார் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கும் முன், மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க பிரசாந்த் கிஷோர் விண்ணப்பித்தாரா? என்ற கேள்விக்கு அவர் நேரடி பதிலைத் தவிர்த்துவிட்டார். "பிரசாந்த் கிஷோர் ஒரு படித்த மனிதர். அவர் தனது பொறுப்புகளை நன்கு புரிந்துகொள்கிறார். அவர் முன்பு மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் தேர்தல் வியூக வகுப்பாளராக நிறுத்தப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. எங்கள் தரப்பில் தவறு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையம் நினைத்தால் எங்களை அணுகட்டும். எங்கள் சட்டக் குழு பதிலளிக்கும்" என்று சன்சுராஜ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த சர்ச்சை பீகாரின் பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்தும் விவாதங்களை கிளப்பி உள்ளது. ஐக்கிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், ‘‘கிஷோர் ஏன் மேற்கு வங்கத்தில் பதிவு செய்யப்பட்டார்? பீகாரைச் சேர்ந்த ஒருவர், டெல்லியில் நிறுவனங்கள் வைத்திருப்பவர் வங்காளத்தில் வாக்காளராகத் தேர்வு செய்தது வேடிக்கையாக உள்ளது. 2021-ல் மம்தா பானர்ஜிக்கு உதவிய பிறகு அவர் ராஜ்யசபா இடத்தை கேட்டாரா?

2021 தேர்தலில் பானர்ஜி வெற்றி பெற்ற பிறகு, அவரை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கச் செய்வதற்காக கிஷோர் ஒரு ஒப்பந்தம் செய்ய முயன்றதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். நாடாளுமன்றத்தில் மேல் சபை உறுப்பினராக வர அவர் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் முதல்வராக வெற்றிபெற்ற பிறகு அவரை நிராகரித்திருக்க வேண்டும். எனவே கோபத்தில், ஆலோசனை வழங்குவதில் இருந்து ஓய்வு பெறும் நாடகத்தை அவர் நடத்தியிருக்கலாம்" என்று அவர் கூறினார்.
பாஜக தலைவர் நீரஜ் குமார் ‘ ’இரட்டை வாக்காளர் அடையாள அட்டை சிறிய விஷயம் அல்ல. ஒரு கொடூரமான குற்றம் கிஷோர் பீகார் தேர்தலை குறைமதிப்பிற்கு உட்படுத்த திரினாமுல் காங்கிரஸுடன் மோசமான சதி செய்துள்ளார்’’ என அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணைய விசாரணையைக் கடுமைப்படுத்தவும் கோரியுள்ளார்.
