- Home
- Astrology
- Oct 29 Today Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, இன்று சவால்கள் காத்திருக்கு.! இந்த 3 விஷயங்களில் கவனமாக இருங்கள்.!
Oct 29 Today Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, இன்று சவால்கள் காத்திருக்கு.! இந்த 3 விஷயங்களில் கவனமாக இருங்கள்.!
Today Rasi Palan : அக்டோபர் 29, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 29, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:
கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் மனதில் ஒரு வித குழப்பம் ஏற்படலாம். வாழ்க்கையில் புதிய கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்க வேண்டிய சூழல் உருவாகலாம். பழக்கப்பட்ட பாதையை விட உங்கள் மனதிற்கு நேர்மையான ஒன்றை தேர்ந்தெடுப்பது நல்லது. நீங்கள் சிந்திக்கும் விதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில பழைய நம்பிக்கைகளை கைவிட வேண்டும். தனிப்பட்ட விருப்பங்கள், சுதந்திரம், உறவுகள் ஆகியவற்றிக்கிடையே சமநிலையைப் பேண வேண்டி இருக்கும்.
நிதி நிலைமை:
முதலீடு தொடர்பான விஷயங்களில் உங்கள் நலன் விரும்பிகளின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் பொருளாதார நிலைக்கு ஒத்துப் போகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பிறரைப் பார்த்து எதையும் வாங்கவோ அல்லது முதலீடு செய்யவோ வேண்டாம். நிதானமாக செயல்படுவது நிதி ரீதிமையான வலிமையைக் கூட்டும். இன்று எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தனிப்பட்ட வாழ்க்கை:
கணவன் மனைவி அல்லது நெருங்கிய உறவுகள் இடையே வீண் விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொறுமையை கையாள வேண்டியது அவசியம். உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களை வெளிப்படையாகவும், நேரடியாகவும் பேசுவது நல்லது. வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு அமைதியையும், புரிதலையும் தேர்ந்தெடுப்பது உறவுகளைப் பேண உதவும்.
பரிகாரங்கள்:
விநாயகப் பெருமானை வழிபடுவது மனம் தெளிவடையவும், தடைகள் நீங்கவும் உதவும். அனுமனை வழிபடுவது தைரியத்தை அளிக்கும். மனக்குழப்பம் நீங்க அமைதியான சூழ்நிலையில் சிறிது நேரம் தியானம் செய்வது நல்லது. ஏழை மாணவர்களின் கல்விக்குத் தேவையான உதவிகளை செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.