- Home
- Astrology
- Astrology: விஸ்வகர்மாவின் நட்சத்திரத்தில் குடியேறும் சுக்கிரன்.! பொன், பொருளுடன் ஆடம்பரமாக வாழப்போகும் 4 ராசிகள்.!
Astrology: விஸ்வகர்மாவின் நட்சத்திரத்தில் குடியேறும் சுக்கிரன்.! பொன், பொருளுடன் ஆடம்பரமாக வாழப்போகும் 4 ராசிகள்.!
Venus Transit in Chitra Nakshatra: ஜோதிடத்தின் படி சுக்கிர பகவான் அக்டோபர் 28 ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். இது ஒரு முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனால் பலன் தரும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சித்திரை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன்
வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். இவர் அன்பு, அழகு, செல்வம், இன்பங்கள், பொன், பொருள், வசதி, ஆடம்பரம் ஆகியவற்றின் காரகராக அறியப்படுகிறார். இவர் அக்டோபர் 28 ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். இது முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சித்திரை நட்சத்திரம் கலை, படைப்பாற்றல், அழகு, வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் அதிபதியான விஸ்வகர்மாவால் ஆளப்படும் நட்சத்திரமாகும்.
சுக்கிர பகவான் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது அதன் பலன்கள் அதிகமாக இருக்கும். கலை, அழகு, காதல் உறவுகள், ஆடை, ஆபரணங்கள், நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றத்தால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றம் மேஷ ராசியின் ஏழாவது வீடான திருமணம் மற்றும் கூட்டுத் தொழில் ஸ்தானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் திருமண உறவு, காதல் உறவுகளில் அளவில்லாத மகிழ்ச்சியை காண இருக்கின்றனர். தம்பதிகளுக்கிடையே இணக்கம் அதிகரிக்கும். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சமுதாயத்தில் புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இதன் மூலமாக எதிர்பாராத பலன்களை அனுபவிப்பீர்கள். இருப்பினும் உறவுகளில் சமநிலையும், இணக்கத்தையும் பேண வேண்டியது அவசியம்.
ரிஷபம்
சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதி என்பதால் சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். இது உடல் ஆரோக்கியம், கடன் மற்றும் எதிரி ஸ்தானத்தை பாதிக்கும். இதன் காரணமாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் பாராட்டுக்களும், கௌரவமும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். பணப்புழக்கம் சீராக இருக்கும். பழைய கடன்களை அடைப்பதன் மூலம் மன நிம்மதியைப் பெறுவீர்கள். இருப்பினும் உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை. வேலையில் அதிக உழைப்பு தேவைப்படலாம்.
துலாம்
சித்திரை நட்சத்திரத்தின் பெரும் பகுதி துலாம் ராசியில் இருப்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகுந்த நன்மைகளை அளிக்க இருக்கிறது. சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாகவும் இருப்பதால் உங்கள் ஆளுமை, தோற்றம், தன்னம்பிக்கை சிறப்படையும். வாழ்வில் உற்சாகம் அதிகரிக்கும். கலை மற்றும் அழகு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வெற்றியும், புகழும் உண்டாகும். திருமண வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நிதி நிலைமையில் திருப்திகரமான சூழல் நிலவும். இருப்பினும் ஆடம்பரச் செலவுகளை தவிருங்கள். நோக்கங்களில் தெளிவாக இருங்கள்.
விருச்சிகம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி விருச்சிக ராசியின் 12வது வீட்டை பாதிக்கிறது. 12வது வீடு செலவு, தூக்கம் மற்றும் வெளிநாடு ஸ்தானத்தை குறிக்கிறது. இதன் காரணமாக முதலீடுகள் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. புதிய ஆடைகள், ஆபரணங்கள், சொத்துக்கள் சேரும் காலம் நெருங்கியுள்ளது. காதல் மற்றும் உறவுகளில் நல்லிணக்கம் காணப்படும். வெளிநாடு தொடர்பான வேலைகள் சுபமாக முடியும். இருப்பினும் தேவையற்ற செயல்களை கட்டுப்படுத்த வேண்டியது நல்லது. மன அமைதி பெறுவதற்கு ஆன்மீக வழிகளை நாடலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)