அண்ணா சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை - நியூ என்ட்ரி யார் தெரியுமா?
Sunitha Quits Anna Serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் இருந்து, ரத்னா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுனிதா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக யார் நடிக்க உள்ளார் என்கிற விவரம் வெளியாகி உள்ளது.

அண்ணா சீரியல்:
ஜீ தமிழில் கிராமத்து மனம் கமழும் சீரியல் என்றால் அது அண்ணா சீரியல் தான். இந்த தொடரில் நாயகனாக மிர்ச்சி செந்தில் நடிக்க கதாநாயகியாக நித்யா ராம் நடிக்கிறார். மேலும் ரோசரி, மஞ்சுளா ரெட்டி, விகாஷ் சம்பத், விஜே தாரா, விகாஷ், அபினேஷ், ப்ரீத்தா சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
சீரியலின் மையக்கரு:
தங்கைகளுக்கு அண்ணனாக மட்டும் இல்லாமல், ஒரு அம்மாவாக வாழும் புதினமான பந்தத்தை மையப்படுத்தி தான் இந்த தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது தன்னுடைய குடும்பம், மற்றும் தங்கைகளுக்கு எதிராக நடக்கும் சதிகளை ஷண்முகம் எப்படி எதிர்த்து போராடி, தங்கைகளையும் குடும்பத்தையும் காப்பாற்றுகிறான். என்பதே இந்த சீரியலின் மையக்கரு.
கனிக்கு எதிராக நடக்கும் சதி:
ஒருவழியாக தவறான ஒருவன் கையில் சிக்கி சின்னாபின்னமாக ரத்னாவின் வாழ்க்கையை மீட்டெடுத்த ஷண்முகம், வீராவுக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்து விட்டார். சண்முகத்தின் கடைசி தங்கையான கனியை கடத்தி பாண்டியம்மா அவரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்க போகிறது என பரபரப்பான காட்சிகளும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இனி சுனிதாவுக்கு பதில் இவர்:
தற்போது இந்த தொடரில், சண்முகத்தின் மூத்த தங்கையாக ரத்னா கதாபாத்திரத்தில் நடித்து வந்த, சுனிதா தன்னுடைய பர்சனல் காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக, யாழினி என்பவர் புதிய ரத்னாவாக அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். யாஷினி, சுனிதாவை போல் நடிப்பில் ஸ்கோர் செய்து ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.