- Home
- Astrology
- Oct 29 Today Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் இன்று வெற்றிகரமாக நிறைவடையும்.!
Oct 29 Today Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் இன்று வெற்றிகரமாக நிறைவடையும்.!
Today Rasi Palan : அக்டோபர் 29, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 29, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:
விருச்சிக ராசி நேயர்களே, இன்றைய நாள் தெளிவுடன் செயல்படுவீர்கள் முடிவெடுப்பதில் இருந்த தயக்கங்கள் நீங்கி, தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தேவையற்ற கட்டுப்பாடுகளை தளர்த்தி மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கு தயாராக இருங்கள். உங்கள் உள்ளுணர்வு வலிமையுடன் காணப்படும். முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது உள்ளுணர்வை நம்புவது நல்லது. வேலையில் எதிர்பாராத சவால்கள் வரலாம். எனவே நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
நிதி நிலைமை:
நிதி கவலைகள் குறித்து அதிக பயம் கொள்ளத் தேவையில்லை. திட்டமிட்டு செயல்பட்டால் நிதி நிலைமை சீராக இருக்கும். திடீர் செலவுகள் அல்லது கோரிக்கைகள் எழ வாய்ப்பு உள்ளது. எனவே குழப்பம் அடையாமல் முடிவெடுக்க வேண்டியது அவசியம். சேமிப்பை பலப்படுத்த வேண்டும். செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது. முதலீடுகள் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர் சிந்தித்து செயல்படுங்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
உறவுகளில் இன்று நல்லிணக்கம் நிலவும். வீண் வாதங்கள், உணர்ச்சிவசப்பட்ட கருத்து பரிமாற்றங்களை தவிர்க்கவும். துணையின் மீதுள்ள அன்பையும், மரியாதையும் வெளிப்படுத்துவதன் மூலம் உறவு வலுப்படும். உண்மையான அக்கறையை வெளிப்படுத்தி குடும்பத்தினரின் அன்பைப் பெறுவீர்கள்.
பரிகாரங்கள்:
இன்று உங்கள் ராசியின் அதிபதியான செவ்வாய் பகவானுக்குரிய முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. காளியின் வடிவங்கள் அல்லது துர்க்கை அம்மனை வழிபடுவது உங்களின் சக்தியை அதிகரிக்கச் செய்யும். மனம் அமைதி பெறுவதற்கு வாயில்லா ஜீவன்கள், பறவைகளுக்கு உணவளியுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.