- Home
- Astrology
- Oct 29 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, நின்று போன காரியங்கள் இன்று மீண்டும் வேகம் எடுக்கும்.!
Oct 29 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, நின்று போன காரியங்கள் இன்று மீண்டும் வேகம் எடுக்கும்.!
Today Rasi Palan : அக்டோபர் 29, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 29, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் தடைபட்டிருந்த வேலைகள் மீண்டும் தொடங்கும். அதை சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். திட்டமிட்டு செயல்பட்டு காரியங்களில் வெற்றியை ஈட்டுவீர்கள். உங்களின் உழைப்புக்கேற்ற ஆதாயம் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.
நிதி நிலைமை:
இன்று சாமர்த்தியமாக செயல்பட்டு பண வரவை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தேவையில்லாத செலவுகளை தவிர்க்க வேண்டும். முதலீடுகள் குறித்து சிந்திக்கும் பொழுது நிதானமாக முடிவெடுக்க வேண்டும். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும் போதிலும் சில அத்தியாவசியமான செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறுப்பினர்களால் இன்று மகிழ்ச்சியான மனநிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நீண்ட கால தேவையை நிறைவேற்றுவீர்கள். இதன் காரணமாக மன மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் மற்றும் திருமண வாழ்வில் இருந்த தடைகள் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டு பேசுவது உறவை வலுப்படுத்தும். இருப்பினும் பேசும்பொழுது அமைதியையும், நிதானத்தையும் கடைபிடிப்பது நல்லது.
பரிகாரங்கள்:
இன்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைகளைத் தரும். தடைகள் நீங்குவதற்கு விநாயகப் பெருமானை வழிபடலாம். தைரியம் மற்றும் வெற்றி பெறுவதற்கு சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள். காகத்திற்கு உணவளிப்பது, பறவைகளுக்கு நீர் வைப்பது, வாயில்லாத ஜீவன்களுக்கு உணவளிப்பது நன்மைகளைத் தரும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.