MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒவ்வொருத்தருடைய முகத்திரையையும் வச்சு கிழிக்க போகிறேன் – வைல்டு கார்டு எண்ட்ரியின் வார்னிங்!

ஒவ்வொருத்தருடைய முகத்திரையையும் வச்சு கிழிக்க போகிறேன் – வைல்டு கார்டு எண்ட்ரியின் வார்னிங்!

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒவ்வொருத்தருடைய முகத்திரையையும் வச்சு கிழிக்க போகிறேன் என்று வைல்டு கார்டு எண்ட்ரியாக வரும் பிரஜின் வார்னிங் கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Oct 28 2025, 08:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 9:
Image Credit : @team_hdt_OG

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 9:

விஜய் டிவியில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. வெற்றிகரமாக 8 சீசன் முடிவடைந்துள்ள நிலையில், 9-ஆவது சீசன் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி துவங்கியது. கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை நேர்த்தியாக தொகுத்து வழங்கிய, விஜய் சேதுபதி தான் இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

26
அள்ளும் கை தட்டல்கள்:
Image Credit : Bigg Boss Tamil Season 9 Army Facebook

அள்ளும் கை தட்டல்கள்:

அதே போல் கடந்த முறை விஜய் சேதுபதி... போட்டியாளர்கள் பதில் பேசுவதற்கு கூட நேரம் கொடுப்பதில்லை என்பது போன்ற சில விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அந்த பழக்கத்தை மாற்றி கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. விஜய் சேதுபதி ஒவ்வொரு வாரமும் தன்னுடைய கேள்வியை சாட்டையை சுழற்றும் போது கை தட்டல்களும் அள்ளுகிறது.

36
இதுவரை வெளியேறிய போட்டியாளர்கள்:
Image Credit : Vijay Television Twitter

இதுவரை வெளியேறிய போட்டியாளர்கள்:

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதல் நாளே 20 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தனர். இவர்களில், முதல் வாரத்தில் இயக்குனர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து கடந்த வாரம் திருநங்கை போட்டியாளரான அபிசாரா வெளியேறினார். இவர்கள் இருவரும் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டாலும், ஆர் ஜே நந்தினி இனி தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது. இங்கு இருப்பவர்கள் அனைவருமே பொய்யாக இருக்கிறார்கள் என கூறிவிட்டு தானாக முன்வந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

46
வைல்டு கார்டு என்ட்ரி:
Image Credit : Vijay Television

வைல்டு கார்டு என்ட்ரி:

பிக்பாஸ் சீசன் 9 வெற்றிகரமாக 23 நாட்களை கடந்து விட்ட நிலையில்... இந்த முறை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வர உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு இருக்காது என கூறப்பட்ட நிலையில், தற்போது கணவன் - மனைவியாக சேர்ந்து இரு போட்டியாளர்கள் உள்ளே வர உள்ளார்களாம்.

56
நட்சத்திர தம்பதி:
Image Credit : Bigg Boss Tamil Season 9 Army Facebook

நட்சத்திர தம்பதி:

மக்களுக்கு மிகவும் பரிச்சியமான அந்த இரண்டு முகங்கள் யார் யார் தெரியுமா. தொகுப்பாளராக இருந்து, சீரியல் நடிகராக மாறி, பின்னர் சில திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ள ப்ரஜின் மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான சாண்ட்ராவுடம் தான். விஜய் டிவியில் பல ஹிட் தொடர்களில் நடித்துள்ள பிரஜின் பிக்பாஸ் வீட்டின் உள்ளே தன்னுடைய மனைவியோடு வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

66
புரோமோ வீடியோ
Image Credit : our own

புரோமோ வீடியோ

இது குறித்து விஜய் டிவி வெளியிட்ட புரோமோ வீடியோவில் பிரஜின், இந்த வீட்டில் யாருக்கும் மரியாதை தெரியவில்லை, முறையாக மரியாதை இல்லை, நாவடக்கம் இல்லை என்று பேசியதோடு ஒவ்வொருத்தருடைய மாஸ்க்கையும் தனித்தனியாக வைத்து கிழிக்க போகிறேன். இது எண்ட்ரி மட்டும் இல்லை, கடைவார்னிங் என்று கோபமாக எச்சரித்துள்ளார்.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision)

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 9
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thaai Kizhavi Day 4 Box Office : தாய் கிழவி படைத்த வசூல் சாதனை... 4 நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?
Recommended image2
OTTக்கு வரும் வித் லவ் படம்... வாரிசுருட்டிய லைஃப்டைம் வசூல் இத்தனை கோடியா?
Recommended image3
ஆட்டம், பாட்டத்துடன் அடிபொலி கொண்டாட்டம்... வைரலாகும் Virosh ஜோடியின் சங்கீத் போட்டோஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved