- Home
- Tamil Nadu News
- விவசாயிகளுக்கு குட் நியூஸ்! 33% பாதித்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு! தமிழக அரசு அறிவிப்பு!
விவசாயிகளுக்கு குட் நியூஸ்! 33% பாதித்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு! தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு, 33 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

33% பாதிப்புக்கு இழப்பீடு
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகப் பெய்த வடகிழக்குப் பருவமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு, 33 சதவீதத்திற்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிவாரணத் தொகை செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11,754 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தற்போது வரை மாநிலம் முழுவதும் 11,754 ஹெக்டேர் நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், 4,954 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள பயிர்கள் 33 சதவீதத்துக்கும் மேல் சேதமடைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 16,499 விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்டா மாவட்ட நிலவரங்களைப் பொறுத்தவரை, அங்கு மட்டும் 8,452 ஹெக்டேர் நெற்பயிர்கள் மழை நீரில் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், 4,437 ஹெக்டேர் நிலங்களில் உள்ள நெற்பயிர்கள் 33 சதவீதத்திற்கும் மேல் சேதமடைந்துள்ளதால், இந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
கணக்கெடுப்பு மற்றும் இழப்பீடு
வழங்கும் நடைமுறை பாதிப்பு நிலவரம் குறித்த முழுமையான கணக்கெடுப்பு இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் ஆய்வு செய்து, காப்பீடு செய்த விவசாயிகளின் நெற்பயிர்கள் 33 சதவீதத்துக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே உரிய இழப்பீட்டை வழங்குவார்கள். இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக டெபாசிட் செய்யப்படும். 33 சதவீதத்திற்கும் குறைவான பாதிப்பு இருந்தால் இழப்பீடு கிடைக்காது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
காப்பீடு செய்துள்ள விவசாயிகள்
விவரம் தமிழகத்தில் விவசாயிகள் காப்பீடு செய்துள்ள விவரங்களையும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. குருவை சாகுபடியில் 3.19 லட்சம் ஹெக்டேர் நிலத்திற்கும், சம்பா சாகுபடியில் 2 லட்சம் ஹெக்டேர் நிலத்திற்கும் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.
எண்ணிக்கையின் அடிப்படையில், குருவை விவசாயிகள் 1.26 லட்சம் பேரும், சம்பா விவசாயிகள் 81 ஆயிரம் பேரும், நவரை விவசாயிகள் 436 பேரும் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். இந்த காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே, 33 சதவீதத்துக்கும் மேலான பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், இழப்பீடு கிடைக்கும்.