Published : Apr 27, 2025, 07:21 AM ISTUpdated : Apr 27, 2025, 10:33 PM IST

Tamil News Live today 27 April 2025: ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா? ஜெட் வேகத்தில் 2ஆவது இடத்திற்கு தாவிய மும்பை இந்தியன்ஸ்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Tamil News Live today 27 April 2025: ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா? ஜெட் வேகத்தில் 2ஆவது இடத்திற்கு தாவிய மும்பை இந்தியன்ஸ்!

10:33 PM (IST) Apr 27

ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா? ஜெட் வேகத்தில் 2ஆவது இடத்திற்கு தாவிய மும்பை இந்தியன்ஸ்!

09:00 PM (IST) Apr 27

7ஆம் வகுப்பு NCERT பாட புத்தகத்திலிருந்து முகலாயர்கள், சுல்தான்கள் பற்றிய குறிப்புகள் நீக்கம்!

08:58 PM (IST) Apr 27

கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் செய்யும் இந்தியா! இந்தியாவின் நடவடிக்கையால் திணறும் பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதோடு, வர்த்தகத்தையும் நிறுத்தியதால் பாகிஸ்தான் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

மேலும் படிக்க

08:44 PM (IST) Apr 27

செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா ஏற்பு –புதிய அமைச்சர் யார்? நாளை மாலை பதவியேற்பு!

07:18 PM (IST) Apr 27

கோவையில் ரூ.9.67 கோடியில் ஹாக்கி மைதானம்; அடிக்கல் நாட்டிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

06:01 PM (IST) Apr 27

அடுத்தவர் வீட்டின் கதவை மூட திருமாவளவன் யார்? இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்!

திருமாவளவன் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணிக்கு அழைப்பை மறுத்ததற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். நயினார் நாகேந்திரன், திருமாவளவன் யார் மற்றவர்கள் வீட்டுக் கதவை மூடுவதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க

05:50 PM (IST) Apr 27

செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா? புதிய அமைச்சர்களின் உத்தேச பட்டியல்!

05:06 PM (IST) Apr 27

திருவனந்தபுரத்தில் காலராவுக்கு ஒருவர் பலி; 8 ஆண்டுகளில் காலராவுக்கு முதல் உயிரிழப்பு!

05:03 PM (IST) Apr 27

முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு என்ன ஆச்சு! மீண்டும் அப்பலோவில் அனுமதி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

04:46 PM (IST) Apr 27

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து! 3 பெண்கள் பலி! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

04:41 PM (IST) Apr 27

அட்சய திருதியை 2025 நாளில் கூடும் 10 சுப யோகங்கள்; செல்வ, செழிப்பு இரட்டிப்பாகுமா?

04:23 PM (IST) Apr 27

Mahindraவின் தார் வாங்குவது இனி ரொம்ப கஷ்டம்? 8 வேரியண்ட்கள் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி

மஹிந்திரா & மஹிந்திரா தனது பிரபலமான தார் ஆஃப்-ரோடு SUVயின் எட்டு வகைகளை நிறுத்தி வைத்துள்ளது. கன்வெர்ட்டிபிள் டாப், AX 4WD மற்றும் ஓபன் டிஃபரன்ஷியல் கொண்ட LX ஆகியவை இதில் அடங்கும். தற்போது 11 வகைகளில் மட்டுமே தார் கிடைக்கும்.

மேலும் படிக்க

04:08 PM (IST) Apr 27

இந்தியாவில் பிரீமியம் கார்களை களம் இறக்கும் MG Motors

எம்ஜி மோட்டார் இந்த ஆண்டு எம்ஜி எம்9, மாஸ்டர் ஆகிய புதிய பிரீமியம் மாடல்களை வெளியிட உள்ளது. எம்ஜி எம்9 பிரீமியம் அம்சங்களையும் சிறந்த வரம்பையும் வழங்குகிறது, மாஸ்டர் க்ளோஸ்டரின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாக இருக்கும்.

மேலும் படிக்க

04:02 PM (IST) Apr 27

எம்-சாண்ட், பி.சாண்டு விலை குறைப்பு! எவ்வளவு தெரியுமா? குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு!

தமிழகத்தில் எம்-சாண்ட், பி-சாண்ட் மற்றும் ஜல்லி விலை உயர்ந்த நிலையில், தற்போது ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

03:55 PM (IST) Apr 27

மார்பகங்களைத் தொட முயல்வது 'வன்புணர்வு முயற்சி' அல்ல: உயர் நீதிமன்றம்

மார்பகங்களைத் தொட முயல்வது மோசமான பாலியல் வன்கொடுமை மட்டுமே, வன்புணர்வு முயற்சி அல்ல என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை நீதிமன்றம் விதித்த 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து, தண்டனையை 5 முதல் 7 ஆண்டுகள் வரை குறைக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் படிக்க

03:52 PM (IST) Apr 27

12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுனத்தில் குரு – கோடி கோடியாய் கொட்டி கொடுக்கும் குரு; யாருக்கு யோகம்?

03:51 PM (IST) Apr 27

பசுக்களுக்கு 2,100 கிலோ மாம்பழ ஜூஸ், 5,000 ரொட்டிகளை வழங்கிய ஹர்திக் பாண்ட்யாவின் தாய்!

ஹர்திக் பாண்ட்யாவின் தாய் நளினிபென் பாண்ட்யா பசுக்களுக்கு 2,100 கிலோ மாம்பழ ஜூஸ், 5,000 ரொட்டிகளை வழங்கினார்.

மேலும் படிக்க

03:49 PM (IST) Apr 27

ATM கட்டணத்தை மாற்றிய SBI: எத்தனை முறை இலவசமா பணம் எடுக்கலாம்?

இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளின் மாதாந்திர வரம்பை மீறினால், எஸ்பிஐ ஏடிஎம்களில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க

02:46 PM (IST) Apr 27

இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய சீனா! பாகிஸ்தானுக்கு PL-15 ஏவுகணைகளை அனுப்பியது!

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு PL-15 ஏவுகணைகளை சீனா அனுப்பியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம். 

மேலும் படிக்க

02:28 PM (IST) Apr 27

மிகப்பெரிய அவமானம் இது; பஹல்காம் தாக்குதல் குறித்து ட்வீட் போட்ட ஷாருக்கானை வறுத்தெடுத்த பிரபலம்

பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து ட்வீட் போட்ட நடிகர் ஷாருக்கானை இன்போசிஸ் முன்னாள் அதிகாரியான மோகன்தாஸ் பாய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க

02:15 PM (IST) Apr 27

32,438 ரயில்வே குரூப் D பணிக்கு 1.08 கோடி பேர் விண்ணப்பம்!

ரயில்வே குரூப் D வேலைவாய்ப்புக்கு 1.08 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. மும்பையில் இருந்து அதிகபட்சமாக 15.59 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன, அதைத் தொடர்ந்து சண்டிகர் மற்றும் சென்னை.

மேலும் படிக்க

02:08 PM (IST) Apr 27

கோவிலை புனரமைக்க கோரிய இஸ்லாமிய வழக்கறிஞர்.! அதிரடி உத்தரவிட்ட நீதிபதிகள்- கொண்டாடும் இந்து மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள சோழர் கால பாசி அம்மன் கோயில் சிதிலமடைந்துள்ளதால், அதைப் புனரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததன் பேரில், நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறைக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

02:06 PM (IST) Apr 27

என்னது! கோடை மழை கொட்டித்தீர்க்க போகுதா? வானிலை மையம் கூறுவது என்ன? பரபரப்பு தகவல்!

தமிழகத்தில் வெயில் 100 டிகிரி தாண்டி கொளுத்தி வருகிறது. இருப்பினும், இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க

01:43 PM (IST) Apr 27

விஜய் வருகையால் ஸ்தம்பித்த கோவை; தவெக-வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு

கோவையில் நடைபெற்ற பூத் கமிட்டி மீட்டிங்கில் கலந்துகொள்ள நடிகர் விஜய் வந்திருந்த நிலையில், அப்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக-வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

01:34 PM (IST) Apr 27

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: 14 பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்ப்பு

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 14 பயங்கரவாதிகளின் வீடுகளை அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

மேலும் படிக்க

01:25 PM (IST) Apr 27

சென்னையில் ஒரே ஆண்டில் இவ்வளவு சாலை விபத்துகள் குறைந்துள்ளதா.? ரகசியம் என்ன தெரியுமா.?

சென்னையில் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு போக்குவரத்து அமலாக்கப் பணிகள், ரோந்துப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 2025ல் 14% இறப்புகள் குறைந்துள்ளன.

மேலும் படிக்க

01:18 PM (IST) Apr 27

இந்தியா விதித்த தடை! பாகிஸ்தானில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு? சீனா, ஐரோப்பியாவிடம் கையேந்தும் நிலை!

இந்தியாவின் வர்த்தக தடையால் பாகிஸ்தானில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 
 

மேலும் படிக்க

01:05 PM (IST) Apr 27

இனி கிரெடிட் கார்டுகளை இப்படி பயன்படுத்தினால் 'லாபம்' - எப்படி தெரியுமா?

அதிக விலை கொண்ட பொருட்களை வாங்கும்போது EMI வசதியுடன் கூடிய கிரெடிட் கார்டுகள் என்ன என்று முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

12:42 PM (IST) Apr 27

நள்ளிரவில் பயங்கரம்! பாஜக பிரமுகர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை! பதற்றம்! போலீஸ் குவிப்பு!

புதுச்சேரி பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமா சங்கர், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் படிக்க

12:36 PM (IST) Apr 27

25 வருடம் ஆனாலும் இந்த காரை மக்கள் வாங்கிட்டு இருக்காங்க - மவுசு குறையல

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி, வேகன்ஆர் மூலம் இந்திய வாடிக்கையாளர்களின் இதயங்களை வென்றுள்ளது. 25 ஆண்டுகளில் 33.7 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி, ஒவ்வொரு நான்கு வாங்குபவர்களில் ஒருவர் மீண்டும் காரை வாங்கியுள்ளனர். 2024-25 நிதியாண்டில் 1.98 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி, மாருதியின் சிறந்த விற்பனையான கார் என்ற பெருமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

12:22 PM (IST) Apr 27

Airtelன் அசத்தலான ட்ரீட்! உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சிம் மாற்ற வேண்டாம்?

ஏர்டெல் இந்தியாவின் முதல் சர்வதேச ரோமிங் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 189 நாடுகளில் வரம்பற்ற டேட்டா வசதி கிடைக்கும். 

மேலும் படிக்க

12:15 PM (IST) Apr 27

காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சி: பிரதமர் மோடி

சமீபத்திய பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளின் விரக்தியின் அறிகுறி என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வலியை ஆழமாக உணர்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் படிக்க

12:08 PM (IST) Apr 27

மினி SUV-யை வெளியிடும் மாருதி சுஸுகி ஹஸ்லர்; நானோவுக்கு போட்டி

மாருதி சுஸுகி புதிய மினி SUV விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஹஸ்லர் என அழைக்கப்படும் இந்த வாகனம் டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும். கெய் கார் பிரிவில் வரும் இந்த காரில் 660 சிசி என்ஜின் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

12:05 PM (IST) Apr 27

வெயிட்டிங் லிஸ்ட்டில் வாடிவாசல்; அடுத்த படம் யாருடன்? அதிகாரப்பூர்வமாக அறிவித்த சூர்யா

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அதில் தன்னுடைய அடுத்த பட இயக்குனரை அவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

மேலும் படிக்க

12:03 PM (IST) Apr 27

சாரா டெண்டுல்கருடன் டேட்டிங்கா? முதன் முறையாக மனம் திறந்து பேசிய சுப்மன் கில்!

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், சாரா டெண்டுல்கருடன் டேட்டிங் செய்து வருவதாக பல ஆண்டுகாளாக கூறப்படும் நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். 
 

மேலும் படிக்க

12:00 PM (IST) Apr 27

இபிஎஸ் தேர்தல் வியூகம்! 2026ல் அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்! ஆர்.பி.உதயகுமார்!

எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் கொண்டாட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணி, திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

மேலும் படிக்க

11:59 AM (IST) Apr 27

அரசு பணிகளில் சேருவோருக்கு காவல்துறை சரிபார்ப்பு.! டிஜிட்டல் மயமாக்கனும் - அன்புமணி

அரசுப் பணிகளில் சேருவோரின் காவல்துறை சரிபார்ப்பில் காலதாமதம் ஏற்படுவதால் பணிநிலைப்பும், ஊதிய உயர்வும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க

11:55 AM (IST) Apr 27

மைலேஜ் பத்தி கவலையே வேண்டாம்! விற்பனையில் பட்டைய கிளப்பும் EV ஸ்கூட்டர்கள்

எரிபொருள் செலவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், வசதியான பயணத்தையும் வழங்கும் சிறந்த மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றி அறிந்து கொள்வோம். குறுகிய பயணங்களுக்கு ஏற்ற இந்த ஸ்கூட்டர்கள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளால் இயக்கப்படுகின்றன, மேலும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.

மேலும் படிக்க

11:48 AM (IST) Apr 27

வருமானத்தில் தவிக்கும் 5 மாநிலங்கள்; இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் எப்படி இருக்கு?

2011-12ல் 16.2% ஆக இருந்த இந்தியாவின் வறுமை விகிதம் 2022-23ல் 2.3% ஆக குறைந்துள்ளது. வாழ்க்கைத் தரம் மற்றும் வருமானம் உயர்ந்துள்ளதைக் காட்டுகிறது.

மேலும் படிக்க

11:47 AM (IST) Apr 27

தமிழக ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ONGC க்கு அனுமதி

தமிழக ஆழ்கடலில் கன்னியாகுமரி மற்றும் சென்னை அருகே எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ONGCக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் கடல் வளங்கள் பாதிக்கப்படும் என சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்.

மேலும் படிக்க

More Trending News