- Home
- Sports
- Sports Cricket
- ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா? ஜெட் வேகத்தில் 2ஆவது இடத்திற்கு தாவிய மும்பை இந்தியன்ஸ்!
ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா? ஜெட் வேகத்தில் 2ஆவது இடத்திற்கு தாவிய மும்பை இந்தியன்ஸ்!
Mumbai Indians Moved to 2nd Place in IPL 2025 : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

Jasprit Bumrah
Mumbai Indians Moved to 2nd Place in IPL 2025 : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 45ஆவது லீக் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது.
Jasprit Bumrah
தொடக்க வீரர்களான ரியான் ரிக்கல்டன் 58 ரன்கள் எடுக்கவே, ரோகித் சர்மா 12, வில் ஜாக்ஸ் 29, சூர்யகுமார் யாதவ் 54 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். நமன் திர் 25, கார்பின் போஸ் 20 ரன்கள் எடுத்தனர். லக்னோ அணியைப் பொறுத்த வரையில் ஆவேஷ் கான் மற்றும் மாயங்க் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Jasprit Bumrah
பின்னர் 216 ரன்களை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்கம் முதலே சரிவு ஏற்பட்டது. எய்டன் மார்க்ரம் 9 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 27 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த தொடர் முழுவதும் சொதப்பி வந்த அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
Mumbai Indians
மிட்செல் மார்ஷ் 34, ஆயுஷ் பதோனி 35, டேவிட் மில்லர் 24 என்று மிடில் மற்றும் பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக லக்னோ 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலமாக விளையாடிய 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வி உடன் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் சாதனை:
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது. முதல் 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில் அடுத்த 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இப்போது 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
லீக் போட்டியில் முதல் முறையாக லக்னோ அணியை வீழ்த்தியுள்ளது. 7 போட்டிகளில் முதல் முறையாக லக்னோவை வீழத்தியுள்ளது. இதற்கு முன்னதாக 2023 ஐபிஎல் தொடரில் எலிமினேட்டரில் மட்டும் லக்னோவை வீழ்த்தியது.
Rishabh Pant
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் வெற்றி
6 வெற்றி - 2008
5 வெற்றி - 2010 (2ஆவது இடம்)
5 வெற்றி - 2013 (சாம்பியன்)
5 வெற்றி - 2015 (சாம்பியன்)
6 வெற்றி - 2017 (சாம்பியன்)
5 வெற்றி - 2020 (சாம்பியன்)
5 வெற்றி - 2025 *
150ஆவது வெற்றி:
ஐபிஎல் வரலாற்றில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் 150ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.