- Home
- Tamil Nadu News
- கோவிலை புனரமைக்க கோரிய இஸ்லாமிய வழக்கறிஞர்.! அதிரடி உத்தரவிட்ட நீதிபதிகள்- கொண்டாடும் இந்து மக்கள்
கோவிலை புனரமைக்க கோரிய இஸ்லாமிய வழக்கறிஞர்.! அதிரடி உத்தரவிட்ட நீதிபதிகள்- கொண்டாடும் இந்து மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள சோழர் கால பாசி அம்மன் கோயில் சிதிலமடைந்துள்ளதால், அதைப் புனரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததன் பேரில், நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறைக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

Pasi Amman Temple Restoration : பிரசித்தி பெற்ற சோழர் கால பாசி அம்மன் கோவிலை புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கையாக இருந்துள்ளது. இந்த கோயிலை சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தொண்டியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாசி பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில்
Pasi Amman Temple
பல நூற்றாண்டு பழமையான கோயில்
தொண்டிக்கும் எஸ்.பி.பட்டினத்திற்கும் இடையில் கடற்கரை அருகில் உள்ள கிராமம் பாசிபட்டினம் வரலாற்று காலம் தொட்டு இந்த ஊர் மிகவும் பிரசித்தி பெற்றது . இங்கு மிகவும் பழமையான துறைமுகமாக இருந்துள்ளது. இந்த கடற்கரை அருகில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பாசி அம்மன் கோவில் மற்றும் மண்டபம் இருந்துள்ளது.
பாசிபட்டினம் பகுதியில் போர் நடை பெற்றதாக பல வரலாற்று நூல்கள் கூறுகிறது. இங்கு சோழர்களின் போர் வெற்றியின் அடையாளமாக எட்டு கைகளுடன் அமர்ந்த நிலையில் பாசி அம்மன் கோவில் இருந்து உள்ளது. இந்நிலையில் காலப்போக்கில் இந்த கோவில் தற்போது எந்தவித பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி சிதிலமடைந்து காணப்படுகிறது .
Mdu high court
அறநிலையத்துறைக்கு உத்தரவு
எனவே சுமார் பல நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவிலை பாதுகாத்து மக்கள் வழிபாடு செய்வதற்கு புனரமைக்கப்பட வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பல வரலாற்றை கொண்ட இந்த கோயில் பழுதடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பக்தர்கள் வேதனை அடைந்துள்ளதாகவும், எனவே புனரமைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Pasi Amman Temple Restoration
வழக்கறிஞருக்கு மரியாதை
இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில். மனுதாரர் கோரிக்கை குறித்து இந்து சமய அறநிலை துறை செயலாளர் கோவில் புனரமைப்பு குறித்து விசாரணை நடத்தி 4 மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கை முடித்துவைத்துள்ளனர்.
இந்த நிலையில் கோயிலை பராமரிக்க வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக்கிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த கோவிலின் நிர்வாகிகளாக இருக்கக்கூடிய இந்துக்கள் அவரை அழைத்து பரிவட்டம் செய்து மரியாதை செலுத்தியதோடு மட்டுமல்லாது தங்களது நன்றிகளையும் தெரிவித்தனர்.