- Home
- Tamil Nadu News
- சென்னையில் ஒரே ஆண்டில் இவ்வளவு சாலை விபத்துகள் குறைந்துள்ளதா.? ரகசியம் என்ன தெரியுமா.?
சென்னையில் ஒரே ஆண்டில் இவ்வளவு சாலை விபத்துகள் குறைந்துள்ளதா.? ரகசியம் என்ன தெரியுமா.?
சென்னையில் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு போக்குவரத்து அமலாக்கப் பணிகள், ரோந்துப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 2025ல் 14% இறப்புகள் குறைந்துள்ளன.

Chennai road accidents : நாடு முழுவதும் சாலை விபத்துகளால் நாளுக்கு நாள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரை இழந்து வருகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் படி இரு வழி சாலை திட்டம், 4 வழி 8 வழி என அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. இருந்த போதும் சென்னை போன்ற தலைநகரங்களில் இளைஞர்கள் அதி வேகமாக பைக் ஓட்டுவதன் மூலமாகவும், தலைக்கவசம் உள்ளிட்ட அணியாததன் மூலம் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.
car accident
தினந்தோறும் தொடரும் சாலை விபத்துகள்
இந்த நிலையில் சென்னை பெருநகரம் முழுவதும் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு போக்குவரத்து அமலாக்க பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகள், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்,
சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்துவதன் மூலம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வை தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர்.
Chennai road accidents
சாலை விபத்தை குறைக்க நடவடிக்கை
பள்ளி குழந்தைகள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர். விழிப்புணர்வு பிரச்சாரங்களுடன் கூடுதலாக,
சென்னை பெருநகரம் முழுவதும் சோதனைகள் மற்றும் ANPR கேமராக்கள், 2D வேக ரேடார் அமைப்பு மற்றும் interceptor வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் போன்ற தொழில்நுட்பங்கள் உதவியுடன் வேகமாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் குடி போதையில் வாகனம் ஓட்டுதல்
Chennai Traffic Police
குறைந்தது சாலை விபத்துகள்
போன்ற குற்றங்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் பதிவு செய்து போக்குவரத்து அமலாக்க உத்தியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் சாலை நிலவரங்கள், அறிவிப்பு பலகைகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் போன்றவற்றை மேம்படுத்தியதன் மூலம் விபத்து ஏற்படக்கூடிய இடங்களை எளிதில் அடையாளம் கண்டறிய உதவுகிறது. இந்த கூட்டு முயற்சிகள் மூலம் சென்னை பெருநகரில் கடந்த ஆண்டை விட விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைத்துள்ளன.
road safety awareness
14 % சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது
கடந்த 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 25.04.2025 நிலவரப்படி 2025 ஆம் ஆண்டில் இறப்புகள் 14% குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 25.04.2024 வரை 173 உயிரிழப்புகள் நடந்துள்ளது. இந்தாண்டு இது வரை 149 உயிரிழப்புகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.