வெயிட்டிங் லிஸ்ட்டில் வாடிவாசல்; அடுத்த படம் யாருடன்? அதிகாரப்பூர்வமாக அறிவித்த சூர்யா
நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அதில் தன்னுடைய அடுத்த பட இயக்குனரை அவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

Who Will Direct Suriya 46 Movie? Suriya Announced : சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், தரக் பொன்னப்பா, தமிழ், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
Retro Suriya
ஜோராக நடக்கும் ரெட்ரோ ரிலீஸ் பணி
ரெட்ரோ திரைப்படத்தில் ஜாக்கி மற்றும் மாயபாண்டி கலை இயக்குனர்களாக பணியாற்றி உள்ளனர். உடைகள் பிரவீன் ராஜ். சண்டைப்பயிற்சி கெச்சா கம்ஃபக்டே. 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை ராஜசேகர் கர்ப்பூரசுந்தரபாண்டியன், கார்த்திகேயன் சந்தானம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் வருகிற மே மாதம் 1ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் பிசியாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள்... ரெட்ரோ சூர்யாவிற்காக எழுதப்பட்ட கதையே கிடையாது - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
Suriya, venky Atluri
சூர்யாவின் அடுத்த படம் யாருடன்?
அந்த வகையில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். இந்நிலையில், இந்த விழாவில் தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா. அதன்படி தன்னுடைய 46வது படத்தை வெங்கி அட்லூரி இயக்க உள்ளதாகவும், அப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சூர்யா அறிவித்தார்.
Director Venky Atluri
யார் இந்த வெங்கி அட்லூரி?
மேலும் அப்படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்க இருப்பதாகவும் அவர் கூறினார். லக்கி பாஸ்கர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் வெங்கி அட்லூரி, தமிழில் தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கி இருக்கிறார். தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த வெங்கி அட்லூரி சூர்யா படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க காத்திருக்கிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... திருமணத்துக்கு பின் அடித்த ஜாக்பாட்; ரெட்ரோ நாயகனுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்!