- Home
- Tamil Nadu News
- கோவையில் ரூ.9.67 கோடியில் ஹாக்கி மைதானம்; அடிக்கல் நாட்டிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
கோவையில் ரூ.9.67 கோடியில் ஹாக்கி மைதானம்; அடிக்கல் நாட்டிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
Udhayanidhi Stalin : கோவையில் சர்வதேச தரத்தில் இருக்கும் வகையில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் ஹாக்கி மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Udhayanidhi Stalin : கோவையில் ஆர் எஸ் புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவின் போது கோவையில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் ஹாக்கி மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அதுமட்டுமின்றி ரூ.82.14 கோடி மதிப்பீட்டில் 132 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, ரூ.29.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற நிலையில் இருக்கும் 54 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், 25,024 பயனாளிகளுக்கு 239.41 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவின் போது பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது: திராவிட மாடலுக்கு உதாரணமே இப்போது நடைபெறும் இந்த நிகழ்ச்சி தான். திராவிட மாடல் என்றால் எல்லோருக்கும் எல்லாம் என்பது தான். திமுக அரசு அனைவருக்கும் தேவையானவற்றை செய்து கொடுக்கிறது.
மகளிருக்கான விடியல் பயணம், உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை, சிற்றுண்டி திட்டம், மகளிர் உதவித் தொகை என்று எல்லா உதவிகளையும் செய்து வருகிறது.
வேலைக்கு செல்லும் பெண்களில் 43 சதவிகிதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இது தவிர உள்ளாட்சி அமைப்புகளில் 13 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வர இருக்கின்றனர். தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே முன்னிலை மாநிலமாக விளங்குகிறது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.