அதிக விலை கொண்ட பொருட்களை வாங்கும்போது EMI வசதியுடன் கூடிய கிரெடிட் கார்டுகள் என்ன என்று முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Best credit cards for electronics and furniture shopping | கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாதவர்கள் இன்று மிகக் குறைவு. வெகுமதிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் கிரெடிட் கார்டுகளை மிகவும் பிரபலமாக்கியுள்ளன. அதிக விலை கொண்ட பொருட்களை வாங்கும்போது பயன்படுத்தக்கூடிய சிறந்த கிரெடிட் கார்டுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

1. ஐசிஐசிஐ வங்கி: ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை 3 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான காலத்திற்கு சமமான மாதத் தவணைகளாக மாற்றி செலுத்தலாம்.

2. எச்டிஎஃப்சி வங்கி: ஸ்மார்ட் EMI வசதியை எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டுகள் வழங்குகின்றன. 6 முதல் 48 மாதங்கள் வரையிலான தவணைக்காலத்தைத் தேர்வு செய்யலாம்.

3. ஆக்சிஸ் வங்கி: 1%, 1.08%, 1.25%, 1.5%, 2% போன்ற வட்டி விகிதங்களில் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை தவணைகளாக செலுத்தலாம்.

4. எஸ்பிஐ கார்டு: எஸ்பிஐ கார்டு மூலம் பொருட்களை வாங்கும்போது, பின்வரும் மூன்று வழிகளில் மாதத் தவணைகளாக மாற்றலாம்.

A. எஸ்பிஐ கார்டு ஆன்லைன் கணக்கில் உள்நுழையவும்.

B. 56767 என்ற எண்ணிற்கு FP என்று SMS அனுப்பவும்.

C. 3902 02 02/ 1860 180 1290 என்ற எண்களுக்கு அழைக்கவும்.

5. ஆர்பிஎல் வங்கி: 3, 6, 9, 12, 18 அல்லது 24 மாத EMI ஆக பரிவர்த்தனைகளை மாற்ற ஆர்பிஎல் வங்கி வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது.

பெட்ரோல் பங்க்கில் இத்தனை இலவச வசதிகள் இருக்கா? மறக்காம நோட் பண்ணுங்க!