பெட்ரோல் பங்க்கில் இத்தனை இலவச வசதிகள் இருக்கா? மறக்காம நோட் பண்ணுங்க!
பெட்ரோல் பங்க்-க்கு எரிபொருள் நிரப்ப மட்டும் போறீங்களா? அங்க இலவசமா கிடைக்கிற வசதிகள் நிறைய இருக்கு. அது என்னென்னனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
பெட்ரோல் பங்க்-ல இலவச சேவைகள்
வெளியூர் போகும்போது சில விஷயங்கள்ல ரொம்ப கஷ்டப்படுவோம். முக்கியமா டாய்லெட் போகணும்னா ரொம்ப கஷ்டமா இருக்கும். குறிப்பா பெண்கள் ரொம்ப கஷ்டப்படுவாங்க. ஆண்கள் கூட சில நேரம் வெளியிலயே போற மாதிரி இருக்கும். அதனால சுத்தம் இல்லாம போறதோட, நம்மளும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இந்த வெயில் காலத்துல சாப்பாடு இல்லாட்டியும் தண்ணி இல்லாம போக முடியாது. ஒவ்வொரு தடவையும் தண்ணி பாட்டில் வாங்கினா காசு அதிகமா செலவாகும். இது மாதிரி நிறைய பிரச்சனைகள பயணத்துல சந்திப்போம். இதுக்கெல்லாம் பெட்ரோல் பங்க்ல சரியான தீர்வு இருக்கு. பெட்ரோல் பங்க்னா பெட்ரோல் மட்டும் தான் கிடைக்கும்னு நினைப்போம். ஆனா நிறைய பேருக்கு தெரியாத வசதிகள் அங்க இருக்கு. டாய்லெட், தண்ணி மட்டும் இல்லாம இன்னும் நிறைய வசதிகள் இருக்கு. அத பத்தி இங்க தெரிஞ்சுக்கலாம்.
பெட்ரோல் பங்க்-ல இலவச சேவை
பெட்ரோல் பங்க்-ல கிடைக்கிற வசதிகள்:
பெட்ரோல் பங்க்-ல பெட்ரோல் மட்டும் இல்ல, நிறைய வசதிகள் இருக்கு. நீங்க பெட்ரோல், டீசல் போடலனாலும் இந்த வசதிகள பயன்படுத்தலாம். அதுவும் இலவசமா. இப்படி பெட்ரோல் பங்க்கை பயன்படுத்தி வசதியான பயணத்தை தொடரலாம்.
1. டாய்லெட்:
பயணத்துல ரொம்ப கஷ்டப்படுற விஷயம் டாய்லெட் போறது. தூரம் போகும்போது சின்ன குழந்தைங்க மட்டும் இல்லாம பெரியவங்களும் அடிக்கடி டாய்லெட் போகணும்னு நினைப்பாங்க. ஆனா எங்க பாத்தாலும் டாய்லெட் இருக்காது. அதனால ஹோட்டல்லயோ இல்ல தாபாவுலயோ வண்டிய நிறுத்திட்டு வாஷ் ரூம் போவாங்க. சில நேரம் அதுக்கு காசு கூட கட்ட வேண்டியிருக்கும்.
ஆனா எந்த ஹோட்டல்லயும் நிக்காம, காசு எதுவும் கொடுக்காம பெட்ரோல் பங்க்-ல டாய்லெட் பயன்படுத்தலாம். பயணிகளுக்காக சுத்தமான டாய்லெட்ட பெட்ரோல் பங்க்-ல வச்சிருக்கணும். இந்த வசதி இல்லனா புகார் கூட கொடுக்கலாம்.
2. குடிதண்ணீர்:
பயணத்துல, குறிப்பா வெயில் காலத்துல தண்ணி இல்லாம இருக்க முடியாது. வெயிலோட சூட்ட தணிக்க அடிக்கடி தண்ணி குடிக்கணும். ஆனா ரோட்டுல தண்ணி கிடைக்கிறது கஷ்டம். அதுவும் காசு கொடுத்து வாங்கணும்.
ஆனா எல்லா பெட்ரோல் பங்க்-லயும் இலவசமா தண்ணி கிடைக்கும். அதனால பெட்ரோல் போடும்போது தாகத்த தணிச்சுக்கலாம். பாட்டில்ல தண்ணி பிடிச்சுக்கலாம். இப்படி பெட்ரோல் பங்க்-ல கிடைக்கிற தண்ணிய குடிச்சு தாகத்த தணிக்கிறது மூலமா பயண செலவையும் குறைக்கலாம்.
போன் வசதிகள்
3. போன் வசதி:
பயணத்துல செல்போன் ரொம்ப முக்கியம். நம்மள பத்தி வீட்டுல இருக்கறவங்ககிட்ட சொல்லணும்னாலும், அவங்ககிட்ட இருந்து ஏதாவது முக்கியமான விஷயம் தெரிஞ்சுக்கணும்னாலும் செல்போன் ஆன்ல இருக்கணும். ஆனா சில நேரம் சார்ஜ் இல்லாம மொபைல் ஆஃப் ஆகலாம். அந்த மாதிரி நேரத்துல வீட்டுல இருக்கறவங்க கவலைப்படுவாங்க.
செல்போன் ஆஃப் ஆனா இல்ல வேற ஏதாவது காரணத்துனால போன் யூஸ் பண்ண முடியலனா பெட்ரோல் பங்க்-க யூஸ் பண்ணிக்கலாம். அங்க இலவசமா போன் யூஸ் பண்ணலாம். அந்த போன் மூலமா வீட்டுல இருக்கறவங்ககிட்ட பேசலாம். ஏதாவது உதவி வேணும்னாலும் கேட்கலாம்.
4. ஃபர்ஸ்ட் எய்ட் கிட்:
பயணத்துல சின்ன சின்ன விபத்துகள் நடக்கிறது சகஜம். எவ்ளோ ஜாக்கிரதையா இருந்தாலும் சில நேரம் விபத்துல சிக்குவோம். நிறைய நேரம் ஹாஸ்பிடல் போய் ட்ரீட்மென்ட் எடுக்கிற அளவுக்கு பெருசா இருக்காது. அதே மாதிரி ட்ரீட்மென்ட் எடுக்காம விட முடியாத சின்ன காயமா இருக்கும். அந்த மாதிரி நேரத்துல பக்கத்துல இருக்க பெட்ரோல் பங்க்-கு போய் ஃபர்ஸ்ட் எய்ட் கிட் யூஸ் பண்ணிக்கலாம். எல்லா பங்க்-லயும் கண்டிப்பா ஃபர்ஸ்ட் எய்ட் கிட் இருக்கணும். அத இலவசமா யூஸ் பண்ணிக்கலாம்.
புகார் செய்ய வேண்டிய எண்
5. வண்டிக்கு இலவச காற்று:
தூரமா போறவங்க வண்டி டயர்ல காத்து இருக்கான்னு பாத்துக்கணும். சில நேரம் காத்து கம்மியா இருந்தா விபத்து நடக்கலாம். அதனால பெட்ரோல் பங்க்-ல இலவசமா காத்து நிரப்பிக்கலாம். வண்டில காத்து நிரப்புறது இலவசம் தான். ஆனா நிறைய பங்க்-ல காசு கேப்பாங்க. காசு கேட்டா புகார் பண்ணலாம்.
பெட்ரோல் பங்க்-ல எந்த வசதியும் இல்லனா இந்த நம்பருக்கு புகார் பண்ணுங்க:
மேல சொன்ன வசதிகள் பெட்ரோல் பங்க்-ல இல்லனா, அத யூஸ் பண்ண காசு கேட்டா உடனே சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு புகார் பண்ணலாம்.
இந்தியன் ஆயில் பெட்ரோல் - 1800233355
பாரத் பெட்ரோலியம் - 1800224344
ஹெச்.பி.சி.எல் - 18002333555
ரிலையன்ஸ் - 18008919023 இந்த நம்பருக்கு போன் பண்ணி புகார் பண்ணலாம்.
23 கிமீ மைலேஜ் தரும் 8 சீட்டர் கார்கள்.. 7 பேருக்கும் மேல டிராவல் பண்ணலாம்!