MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • சாரா டெண்டுல்கருடன் டேட்டிங்கா? முதன் முறையாக மனம் திறந்து பேசிய சுப்மன் கில்!

சாரா டெண்டுல்கருடன் டேட்டிங்கா? முதன் முறையாக மனம் திறந்து பேசிய சுப்மன் கில்!

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், சாரா டெண்டுல்கருடன் டேட்டிங் செய்து வருவதாக பல ஆண்டுகாளாக கூறப்படும் நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.  

2 Min read
Rayar r
Published : Apr 27 2025, 12:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Shubman Gill Explains Sara Tendulkar Dating Rumours: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகளான சாரா டெண்டுல்கரும் டேட்டிங் செய்து வருவதாக பல ஆண்டுகளாக தகவலகள் தகவல்கள் பரவி வருகின்றன. இருவரும் சேர்ந்து வலம் வருவதாக நெட்டிசன்கள் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர். ஆனால் இந்த வதந்திகள் குறித்து சுப்மன் கில்லும், சாரா டெண்டுல்கரும் விளக்கம் அளிக்காமல் மவுனம் சாதித்து வந்தனர்.

இந்நிலையில், சாரா டெண்டுல்கருடன் டேட்டிங் செய்து வருவதாக வந்த வதந்திகள் குறித்து சுப்மன் கில் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக தான் தனிமையில் இருப்பதாகவும், தன்னைப் பற்றி வரும் வதந்திகளைப் பொருட்படுத்துவதில்லை என்றும், அவை உண்மையல்ல என்பது தனக்குத் தெரியும் என்றும் சுப்மன் கில் கூறியுள்ளார். ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

24
Shubman Gill - Sara Tendulkar

Shubman Gill - Sara Tendulkar

கடந்த சில ஆண்டுகளாக சாரா டெண்டுல்கருடன் சுப்மன் கில் காதலித்து வருவதாகவும், இருவரும் ஒன்றாகச் சுற்றி வருவதாகவும் செய்திகள் பரவின. மேலும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இருவருக்கும் தொடர்புடைய போலி புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால், இவர்களுக்குள் ஏதோ இருக்கிறது என்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதம் எழுந்தது. மறுபுறம், பாலிவுட் நடிகை சாரா அலிகானுடனும் சுப்மன் கில் உறவில் இருப்பதாக மற்றொரு செய்தி பரவியது.

மழையால் மாறி போன போட்டி – 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி!

34
Shubman Gill explains the rumors

Shubman Gill explains the rumors

இந்த வதந்திகள் அனைத்திற்கும் ஒரே நேரத்தில் விளக்கமளித்துள்ளார் சுப்மன் கில். ''நான் மூன்று ஆண்டுகளாகத் தனிமையில் இருக்கிறேன். பலருடன் என்னைத் தொடர்புபடுத்தி செய்திகள் வருகின்றன. எனக்குத் தெரியாத நபர்கள், நான் ஒருபோதும் சந்திக்காத நபர்களுடன் என்னைத் தொடர்புபடுத்தி வதந்திகளைப் பரப்புகிறார்கள். ஆனால் இதெல்லாம் உண்மையல்ல, நான் யாருடனும் உறவில் இல்லை. நான் மிகவும் தொழில்முறை சார்ந்தவன். எனக்கு கிரிக்கெட் தான் உலகம், அதனால் உறவில் இருக்கும் அளவுக்கு எனக்கு நேரம் கிடைப்பதில்லை'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

44
Shubman Gill, Cricket

Shubman Gill, Cricket

தொடர்ந்து பேசிய சுப்மன் கில், ''கிட்டத்தட்ட 300 நாட்களாக ஓய்வில்லாமல் கிரிக்கெட் பயணம் செய்து வருகிறேன். டேட்டிங் செய்ய எனக்கு எங்கே நேரம் இருக்கிறது? வதந்திகள் என்பது தானியங்கி சுவிட்ச் போன்றவை. அவை எப்போது யார் மீது பாயும் என்று சொல்வது கடினம்'' என்றார். சுப்மன் கில்லுடன் சாரா டெண்டுல்கர், சாரா அலிகான் ஆகியோரைத் தொடர்புபடுத்தி மைதானத்திலும் ரசிகர்கள் கோஷமிடுவது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த விஷயத்தில் சக கிரிக்கெட் வீரர்களும் கில்லைக் கிண்டல் செய்வார்களாம்.  சாரா டெண்டுல்கர் மட்டுமின்றி சாரா அலிகான், ரிதிமா பாண்டிட், அவனீத் கவுர் போன்ற நடிகைகளுடனும் சுப்மன் கில் டேட்டிங் செய்வதாக தகவல்கள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் 300 ரன்களையும் கடக்கக்கூடிய நிலைக்கு வளர்ந்துவிட்டது - ரிங்கு சிங்
 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணி
ஷுப்மன் கில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
Recommended image2
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!
Recommended image3
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2 அன்கேப்டு இந்திய வீரர்கள்..! லட்டு போல் தூக்கிய சிஎஸ்கே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved