KKR vs PBKS Match Results: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்: ஐபிஎல் 2025ன் 44வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டன.

KKR vs PBKS Match Results: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025ன் 44வது போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா சிறப்பாக ஆடினர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் அணியைப் பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார். பதிலுக்கு ஆடிய கேகேஆர் அணி அதிக நேரம் பேட்டிங் செய்யவில்லை, மழை குறுக்கிட்டது.

Scroll to load tweet…

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். பிரப்சிம்ரன் சிங் (83 ரன்கள், 49 பந்துகள், 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (69 ரன்கள், 35 பந்துகள், 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தனர். ஐயர் 25 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் 201 ரன்கள் எடுத்தது. வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Scroll to load tweet…

இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியவுடன் மழை

202 ரன்கள் இலக்கைத் துரத்திய கேகேஆர் அணியில் சுனில் நரைன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் 7 ரன்கள் எடுத்தனர். அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் போட்டி நிறுத்தப்பட்டது. மழை விடாமல் பெய்த நிலையில் போட்டி நேரம் முடிந்த பின்னர் போட்டி ரத்து செய்யப்பட்டது.

கேகேஆருக்குப் பிளேஆஃப் வாய்ப்பு கடினம்

போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு புள்ளிகள் பெற்றன. இதன் மூலமாக பஞ்சப் கிங்ஸ் அணி 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்தது. ஆனால், கேகேஆர் 7வது இடத்தில் உள்ளது. கேகேஆருக்குப் பிளேஆஃப் வாய்ப்பு கடினமாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3ஆவது முறையாக டிராபி வென்றது. ஆனால், இந்த சீசனில் அதற்கு வாய்ப்புகள் இல்லை.