தமிழக ஆழ்கடலில் கன்னியாகுமரி மற்றும் சென்னை அருகே எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ONGCக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் கடல் வளங்கள் பாதிக்கப்படும் என சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்.

தமிழக ஆழ்கடல் பகுதியில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி (ONGC) நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அருகே உள்ள கடல் பகுதியில் 3 இடங்களிலும் சென்னை அருகில் உள்ள கடல் பகுதியில் ஒரு இடத்திலும் எண்ணெய், எரிவாயு எடுக்க மத்திய அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நான்கு வட்டாரங்கள் உட்பட இந்தியாவில் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய எரிசக்தி இயக்குநரகம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை எடுப்பதால் கடல் வளங்கள் பாதிக்கப்படும் என்றும் சரிசெய்ய முடியாத சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஓ.என்.ஜி.சி.க்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை எதிர்த்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே அறிவித்த குட் நியூஸ்!