மாருதி சுஸுகி புதிய மினி SUV விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஹஸ்லர் என அழைக்கப்படும் இந்த வாகனம் டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும். கெய் கார் பிரிவில் வரும் இந்த காரில் 660 சிசி என்ஜின் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனமான மாருதி சுஸுகி புதிய மினி SUV ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் மாருதி சுஸுகி ஹஸ்லர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் நிறுவனத்தின் வரிசையில் புதிய சேர்க்கையாக இருக்கும். டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற கார்களுக்கு போட்டியாக இந்த கார் இருக்கும்.

மாருதி சுஸுகி புதிய மினி SUV

ஜப்பானின் கெய் கார்கள் பிரிவில் வரும் கார்தான் ஹஸ்லர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. மாருதி சுஸுகி ஹஸ்லரின் தோற்றம் அதன் கெய் கார் DNA வை பிரதிபலிக்கிறது. சிறிய உயரம் மற்றும் பெட்டி வடிவமைப்பு கொண்டது. முன்பு பார்த்த மாடலில் பக்கவாட்டில் பிளாஸ்டிக் கிளாடிங் உடன் கூடிய இரட்டை நிற தோற்றம் இருந்தது.

சிறப்பு அம்சங்கள்

சிறிய அளவிலான சக்கரங்கள் மற்றும் தட்டையான, நிமிர்ந்த பானட் இருந்தது. இதனால் 3.3 மீட்டருக்கும் குறைவான நீளமும் 2.4 மீட்டர் அளவிலான வீல் பேஸும் இந்த காரில் இருக்கும். சுஸுகி ஹஸ்லரைப் பற்றிய விவரங்கள் குறைவாகவே உள்ளன. 660 சிசி என்ஜின் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 48 hp திறனை உருவாக்கும். 64 hp திறன் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட பதிப்பும் இருக்கலாம். இந்த என்ஜின்கள் CVT உடன் இணைக்கப்படும். கூடுதலாக AWD யும் இருக்கும்.

சுஸுகி ஹஸ்லர் என்றால் என்ன?

2014 ஆம் ஆண்டு உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட சுஸுகி ஹஸ்லர் பெட்டி வடிவிலான மைக்ரோ SUV ஆகும். இது மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோவை விட சிறியது. சுஸுகி ஹஸ்லர் 3,300 மிமீ நீளமும் 2,400 மிமீ வீல் பேஸும் 1,475 மிமீ அகலமும் கொண்டது. மாருதி சுஸுகி ஆல்டோ K10 அல்லது MG Comet EV போன்ற கார்களின் பிரிவில் இது வருகிறது.

நகர போக்குவரத்துக்கு ஏற்றது

நகர பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட மைக்ரோ SUV இது. நகர போக்குவரத்துக்கு ஏற்றது. 660 சிசி பெட்ரோல் என்ஜின் கொண்டது. இது நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மற்றும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வடிவங்களில் கிடைக்கிறது. நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் வடிவம் 48 bhp திறனையும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வடிவம் 64 bhp திறனையும் உருவாக்கும். CVT டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் கிடையாது. AWD வசதியும் உள்ளது.

23 கிமீ மைலேஜ் தரும் 8 சீட்டர் கார்கள்.. 7 பேருக்கும் மேல டிராவல் பண்ணலாம்!