MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • இந்த காரை பார்த்தீங்களா..! டஸ்டர் புதிய மாடல் செம்ம கெத்து..!!

இந்த காரை பார்த்தீங்களா..! டஸ்டர் புதிய மாடல் செம்ம கெத்து..!!

இந்திய கார் சந்தையில் நீண்டநாள் எதிர்பார்ப்பை கிளப்பிய புதிய ரெனால்ட் டஸ்டர் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. ரூ.21,000 செலுத்தி இந்த புதிய எஸ்யூவியை முன்பதிவு செய்யலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 17 2026, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரெனால்ட் டஸ்டர் 2026
Image Credit : X/Parth_Go

ரெனால்ட் டஸ்டர் 2026

இந்திய கார் சந்தையில் நீண்டநாள் எதிர்பார்ப்பை கிளப்பிய புதிய ரெனால்ட் டஸ்டர் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. ஆரம்ப விலை ரூ.10.49 லட்சமாக இருந்து, உயர்ந்த மாடல் ரூ.18.49 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முறை டஸ்டர், பழைய வடிவத்தை நினைவுபடுத்தினாலும், மேலும் தைரியமான மற்றும் வலிமையான தோற்றத்துடன் சாலையில் தனித்த கம்பீரத்தை காட்டுகிறது. குறிப்பாக, முன்புற கிரில், அகலமான வீல் ஆர்ச்கள் மற்றும் புதிய எல்.ஐ.டி விளக்குகள் இதன் தோற்றத்தை மேலும் கவர்ச்சியாக மாற்றியுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
புதிய டஸ்டர் அறிமுகம்
Image Credit : X/MaazMz

புதிய டஸ்டர் அறிமுகம்

எஞ்சின் தேர்வுகளில் ரெனால்ட் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விருப்பங்களை வழங்கியுள்ளது. 1.0 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் கிடைக்கின்றன. அதற்கு கூடுதலாக, மேனுவல், சி.வி.டி மற்றும் டூயல் கிளட்ச் தானியங்கி கியர்பாக்ஸ் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். விரைவில் ஹைப்ரிட் மாடலும் வரவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது, இது எரிபொருள் சேமிப்பை மேலும் மேம்படுத்தும்.

Related Articles

Related image1
பெட்ரோல் கிடைக்கலானாலும் கவலை வேண்டாம்! இந்த சைக்கிள் இருந்தா போதும்!
Related image2
Sedan Sales: செடான் மார்க்கெட்டின் கிங் யார்? அசைக்க முடியாத இடத்தில் மாருதி; சரிந்த டாடா..!
34
டஸ்டரின் அம்சங்கள்
Image Credit : X/MaazMz

டஸ்டரின் அம்சங்கள்

பெரிய தொடுதிரை அமைப்பு, முழுமையான டிஜிட்டல் மீட்டர், இணைப்பு வசதிகள், பனோரமிக் சன்ரூஃப், குளிரூட்டும் இருக்கைகள் போன்ற பல நவீன அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் காற்று தூய்மைப்படுத்தும் அமைப்பு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி போன்றவை தினசரி பயன்பாட்டை சுலபமாக்குகின்றன.

44
ரெனால்ட் டஸ்டர் முன்பதிவு
Image Credit : X/Parth_Go

ரெனால்ட் டஸ்டர் முன்பதிவு

இந்த புதிய எஸ்யூவியை வாங்க விரும்புவோர் ரூ.21,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். பல்வேறு மாடல்கள் மற்றும் விலைகளில் கிடைக்கும் இந்த டஸ்டர், நகரம் மற்றும் நீண்ட பயணம் இரண்டிற்கும் ஏற்றதாக இருக்கும். தோற்றத்தில் தைரியம், தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், விலையில் போட்டி – இந்த மூன்றையும் இணைத்து புதிய டஸ்டர் சந்தையில் வலுவான இடத்தை பிடிக்கத் தயாராக உள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரெனால்ட் கார்
SUV (விளையாட்டு பயன்பாட்டு வாகனம்)
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Yamaha R15 vs KTM RC 160.. எந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாஸ் தெரியுமா? முழு விபரம் இதோ
Recommended image2
Old Car Rules: பழைய கார் இருக்கா? இந்த ரூல்ஸ் தெரியலைனா ஃபைன் கன்ஃபார்ம்..!
Recommended image3
Honda E-Clutch: க்ளட்ச் இல்லாம கியர் மாத்தலாம்! ஹோண்டாவின் புதிய NX500 பைக்ல அப்படி என்ன ஸ்பெஷல்?
Related Stories
Recommended image1
பெட்ரோல் கிடைக்கலானாலும் கவலை வேண்டாம்! இந்த சைக்கிள் இருந்தா போதும்!
Recommended image2
Sedan Sales: செடான் மார்க்கெட்டின் கிங் யார்? அசைக்க முடியாத இடத்தில் மாருதி; சரிந்த டாடா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved