MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Sedan Sales: செடான் மார்க்கெட்டின் கிங் யார்? அசைக்க முடியாத இடத்தில் மாருதி; சரிந்த டாடா..!

Sedan Sales: செடான் மார்க்கெட்டின் கிங் யார்? அசைக்க முடியாத இடத்தில் மாருதி; சரிந்த டாடா..!

இந்திய செடான் கார் மார்க்கெட் பிப்ரவரி 2026-ல் 22.4% வளர்ச்சி அடைஞ்சிருக்கு. மாருதி சுசுகி டிசையர் முதலிடத்திலும், ஹூண்டாய் ஆரா, ஹோண்டா அமேஸ் அடுத்தடுத்த இடங்களிலும் இருக்கு.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 17 2026, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sedan Cars Sales
Image Credit : maruti suzuki

Sedan Cars Sales

இப்போ எஸ்யூவி கார்களோட காலம்னு எல்லாரும் சொல்லிட்டு இருந்தாலும், இந்தியாவோட செடான் கார் மார்க்கெட் இன்னும் உயிர்ப்போட இருக்குறது மட்டுமல்ல, வேகமா வளர்ச்சியும் அடைஞ்சிட்டு வருது. பிப்ரவரி 2026-ல் மட்டும் மொத்தம் 35,919 செடான் கார்கள் விற்பனையாகி இருக்கு. இது போன வருஷத்தை விட 22.4% அதிகம். இந்த விற்பனையிலயும் வழக்கம் போல மாருதி சுசுகி டிசையர் தான் முதல் இடத்தைப் பிடிச்சிருக்கு. ஹூண்டாய் ஆரா ரெண்டாவது இடத்துக்கு வந்திருக்கு. போன மாசம் டாப் 10 இடங்களைப் பிடிச்ச செடான் கார்கள் என்னென்னனு பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
அதிகம் விற்பனையான செடான் கார் எது?
Image Credit : India Today

அதிகம் விற்பனையான செடான் கார் எது?

பிப்ரவரி 2026-ல், மாருதி சுசுகி டிசையர் மட்டும் 19,326 யூனிட்கள் விற்பனையாகியிருக்கு. இது மொத்த செடான் மார்க்கெட்ல கிட்டத்தட்ட 54% பங்கு. அதாவது, விற்பனையான ஒவ்வொரு ரெண்டு செடான் கார்ல ஒண்ணு டிசையர் தான். டிசையருக்கு அடுத்தபடியா ஹூண்டாய் ஆரா சூப்பரா பெர்ஃபார்ம் பண்ணியிருக்கு. அதோட விற்பனை 40% அதிகமாகி, 6,733 யூனிட்களைத் தொட்டிருக்கு.

Related Articles

Related image1
டிசையர் கார் வாங்க ஐடியா இருக்கா.? லோன் EMI & டவுன் பேமெண்ட் விவரங்களை நோட் பண்ணுங்க
Related image2
புதிய லுக்.. OG-ஹோண்டா அமேஸ்: என்ன ஸ்பெஷல்?
34
கார்களின் பட்டியல்
Image Credit : Google

கார்களின் பட்டியல்

மாருதி டிசையர், ஹூண்டாய் ஆராவுக்கு அடுத்த இடத்துல ஹோண்டா அமேஸ் இருக்கு. 3,513 யூனிட்கள் விற்பனையாகி, மூணாவது இடத்துல நிலையா இருக்கு. மிடில் ரேஞ்ச் கார்களோட போட்டி இன்னும் சுவாரஸ்யமா இருந்துச்சு. ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் 1,804 யூனிட்கள் விற்பனையாகியிருந்தாலும், அதுல ஒரு சின்ன சரிவு தெரிஞ்சது. ஆனா, நிஜமான ஆச்சரியம் கொடுத்தது ஸ்கோடா ஸ்லாவியா தான். 1,674 யூனிட்கள் விற்பனையாகி, 85.8% என்ற பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பதிவு செஞ்சிருக்கு.

44
சரிவை சந்தித்த கார்கள்
Image Credit : Google

சரிவை சந்தித்த கார்கள்

அதே சமயம், டாடா டிகோர் 1,447 யூனிட்களோட கொஞ்சம் பின்தங்கியிருக்கு. ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி கார்களின் விற்பனை பெரிய அளவுல சரிஞ்சிருக்கு. வெர்னா வெறும் 694 யூனிட்களும், சிட்டி 525 யூனிட்களும் தான் விற்பனையாகியிருக்கு. ஆனா, இந்த மாடல்களுக்கு புது அப்டேட்கள் வரப்போறதால, அதோட விற்பனை மீண்டும் அதிகரிக்கும்னு எதிர்பார்க்கலாம்.

எஸ்யூவி கார்கள் டிரெண்டிங்ல இருந்தாலும், செடான் செக்மென்ட் இன்னும் வலுவா இருக்குனு பிப்ரவரி 2026 விற்பனை விவரங்கள் தெளிவா காட்டுது. டிசையர் மாதிரி மாடல்கள் மார்க்கெட்டை ஆதிக்கம் செய்யுது, ஸ்லாவியா மாதிரி கார்கள் வலுவான கம்பேக் கொடுக்குது. வர்ற மாசங்கள்ல புது மாடல்கள் இந்த செக்மென்ட்டை எப்படி மாத்தப்போகுதுனு பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார் செய்தி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Yamaha R15 vs KTM RC 160.. எந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாஸ் தெரியுமா? முழு விபரம் இதோ
Recommended image2
Old Car Rules: பழைய கார் இருக்கா? இந்த ரூல்ஸ் தெரியலைனா ஃபைன் கன்ஃபார்ம்..!
Recommended image3
Honda E-Clutch: க்ளட்ச் இல்லாம கியர் மாத்தலாம்! ஹோண்டாவின் புதிய NX500 பைக்ல அப்படி என்ன ஸ்பெஷல்?
Related Stories
Recommended image1
டிசையர் கார் வாங்க ஐடியா இருக்கா.? லோன் EMI & டவுன் பேமெண்ட் விவரங்களை நோட் பண்ணுங்க
Recommended image2
புதிய லுக்.. OG-ஹோண்டா அமேஸ்: என்ன ஸ்பெஷல்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved