இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

08:50 AM (IST) Sep 23
CIBIL score : கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த சுயவேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், சிபில் ஸ்கோர் போன்ற காரணங்களுக்காக விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டாம் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
11:21 PM (IST) Sep 22
ஆவின் பால் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது, தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அண்ணாமலை - டிடிவி தினகரன் சந்திப்பு, விஜய் மீது அவதூறு வழக்கு தொடர ஆலோசிக்கும் தமிழக அரசு உள்ளிட்ட இன்றைய முக்கியச் செய்திகள்.
10:55 PM (IST) Sep 22
சாஃப் U-17 சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. ஏற்கெனவே ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் நேற்று இந்தியா பாகிஸ்தானை பந்தாடி இருந்தது.
10:43 PM (IST) Sep 22
பிரிட்டன், கனடா, மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்ததற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
10:26 PM (IST) Sep 22
தவெக தலைவர் விஜய் சொன்னது போலவே நெல் கொள்முதல் மையங்களில் மூட்டைக்கு 60 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக விவசாயிகள் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.
09:58 PM (IST) Sep 22
வலதுசாரி ஆர்வலர் சார்லி கிர்க்-கின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிர்க்கின் துக்கத்தில் இருந்த மனைவிக்கு அருகில் நின்று நடனமாடியுள்ளார். டிரம்ப்பின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
09:42 PM (IST) Sep 22
திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. திமுக அரசின் ஊழலே இதற்கு காரணம் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
09:27 PM (IST) Sep 22
Kathir and Raji Romance Scene in Tamil : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கதிர் மற்றும் ராஜீயின் ரொமான்ஸ் காட்சிகள் ஏராளமாகவே நிறைந்துள்ளன. அதைப் பற்றி பார்க்கலாம்.
09:04 PM (IST) Sep 22
234 தொகுதிக்கான பல்ஸ் பார்க்க விஜய் ஒரு புறம் சுற்றுப்பயணம் கிளம்பி இருக்கிறார். இன்னொரு புறம் தனக்கான தொகுதி தேர்வை சத்தமில்லாமல் கவனிக்கவும் தொடங்கி இருக்கிறார்.
08:48 PM (IST) Sep 22
08:08 PM (IST) Sep 22
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனை திடீரென சந்தித்து பேசினார். இருவரும் பேசியது என்ன? அண்ணாமலையில் அடுத்த நகர்வு எப்படி இருக்கும்? என்பது குறித்து விரிவாக செய்த செய்தியில் பார்க்கலாம்.
07:53 PM (IST) Sep 22
தீபிகா படுகோன் டோலிவுட் பயணம் குறுகிய காலமே நீடித்தது. தெலுங்கு ரசிகர்களின் விருப்பமான ஜெனிலியாவைப் போலல்லாமல், தீபிகாவால் இந்தத் துறையில் தனது இருப்பைத் தக்கவைக்க முடியவில்லை, அதற்கான காரணங்கள் இங்கே
07:47 PM (IST) Sep 22
தங்கம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, 116,000 ஐ தாண்டியது, வெள்ளியும் அதிக விலை உயர்வை எட்டியுள்ளது. டெல்லியில் தங்கத்தின் விலை திங்கட்கிழமை 10 கிராமுக்கு ₹2,200 அதிகரித்து ₹116,200 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
07:40 PM (IST) Sep 22
Anna Serial Today Episode : ஜீ தமிழ் தொலைக்காட்சியில், அண்ணன் - தங்கைகளின் பாசப்பிணைப்பாக ஒளிபரப்பாகி வரும், 'அண்ணா' சீரியலின் இன்றைய அப்டேட் இதோ...
07:34 PM (IST) Sep 22
'தி வயர்' செய்தி நிறுவனத்திற்கு எதிரான அவதூறு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவதூறு வழக்குகளை கிரிமினல் குற்றமாக கருதுவதை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளது.
07:30 PM (IST) Sep 22
Idly Kadai Copy From Nayanthara Annapoorani : தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் இட்லி கடை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
07:01 PM (IST) Sep 22
அக்குள் வியர்வை நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்க சில சூப்பரான வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
06:49 PM (IST) Sep 22
Asia Cup 2025: India vs Pakistan: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் 3வது முறையாக அதுவும் பைனலில் மோத வாய்ப்புள்ளது. இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
06:40 PM (IST) Sep 22
மூணு நாள் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்று தவெக தொண்டனின் தாலியை அறுத்து, அவன் வீட்டில் உள்ள நகையை எடுத்து அடமானம் வைத்து 2000 ரூபாய்க்கு டிக்கெட் வித்து அந்த பணத்தில் ஏசி பஸ்ல போறவன். ஒரு ஷேர் ஆட்டோவில் சேஸ் எக்ஸ்ட்ரா வைத்தால் கேஸ் போடுறானா? இல்லையா?
06:28 PM (IST) Sep 22
Kudumbasthan Actress Saanve Megghana Injured :'குடும்பஸ்தன்' திரைப்படத்தில் நடித்து பிரபலமான, நடிகை சான்வி மேக்னாவுக்கு படப்பிடிப்பி்ன் போது கொதிக்கும் எண்ணெய் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
06:18 PM (IST) Sep 22
பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாணத்தில், பயங்கரவாதிங்கள் இருப்பதாகக் கருதி விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
05:34 PM (IST) Sep 22
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன், காபூலில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து கொண்டு 94 நிமிடங்கள் பயணம் செய்து உயிர் பிழைத்துள்ளான். இந்தச் சிறுவனின் செயல், விமான நிலைய பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
05:33 PM (IST) Sep 22
IndiGo Flight: இண்டிகோ நிறுவனத்தின் விமானத்திலும், அந்த நிறுவனத்தின் பேருந்திலும் ஏசி வேலை செய்யாமல் பயணிகள் அவதிக்கப்படுகின்றனர் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
05:17 PM (IST) Sep 22
உங்க பிரஷர் குக்கர் ரப்பர் லூசாக இருந்தால் எந்தவொரு பணமும் செலவழிக்காமல் அதை எளிய முறையில் சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
05:14 PM (IST) Sep 22
கரு.பழனியப்பனின் பேச்சு கமலஹாசன் தரப்பை மறைமுகமாக சாடுவது போல் அமைந்துள்ளடு. 2018ல் தனது கட்சியைத் தொடங்கியபோது, திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளை ‘ஊழல் கட்சிகள்’ என்று கடுமையாக விமர்சித்தார்.
04:40 PM (IST) Sep 22
ஆடைகளுக்கான புதிய ஜி.எஸ்.டி (GST) விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. தள்ளுபடிக்குப் பிறகான இறுதி இன்வாய்ஸ் விலையின் அடிப்படையிலேயே ஜி.எஸ்.டி கணக்கிடப்படும் என்பதால், நுகர்வோர் பணத்தைச் சேமிக்க வாய்ப்புள்ளது.
04:39 PM (IST) Sep 22
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த கேரி எட்வர்ட்ஸ் என்ற பெண், ChatGPT அளித்த எண்களைப் பயன்படுத்தி பவர்பால் லாட்டரியில் 1,50,000 டாலர் வென்றார். இந்த எதிர்பாராத பரிசுத் தொகை முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
04:26 PM (IST) Sep 22
Aavin Milk: ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்ட பிறகும் ஆவின் பால் பொருட்களின் விலையை குறைக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அடிப்படை விலையை உயர்த்தி, தள்ளுபடி என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதாக கூறியுள்ளார்.
04:25 PM (IST) Sep 22
Indraja Robo Shankar: மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, அப்பாவுக்கு பிடித்த புகைப்படத்துடன் உருக்கமாக வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
04:15 PM (IST) Sep 22
சவுதி அரேபியா தனது "விஷன் 2030" திட்டத்தின் ஒரு பகுதியாக, பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. சமீபத்தில், சவுதி மத்திய வங்கி கூகுள் பே மற்றும் அலிபே+ சேவைகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
03:58 PM (IST) Sep 22
சென்னை பெருங்குடியில், தன் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட அன்பு கணபதி என்பவரை, ராஜதுரை என்பவர் மது அருந்த அழைத்துச் சென்று கத்தியால் குத்திக் கொலை செய்தார். மனைவி மற்றும் குழந்தை காணாமல் போனதால் ஆத்திரமடைந்த ராஜதுரை இந்த கொலையை செய்துள்ளார்.
03:52 PM (IST) Sep 22
மறைந்த பிரபல அஸ்ஸாமி பாடகர் ஜுபீன் கர்க்கின் நினைவாக, கவுகாத்தியில் நடைபெறும் மகளிர் ODI உலகக் கோப்பை 2025 தொடக்க விழாவில் 40 நிமிட சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இந்தியா-இலங்கை போட்டிக்கு முன் அவருக்கு மரியாதை செலுத்தப்படும்.
03:51 PM (IST) Sep 22
மகிழ்ச்சியான இல்லறத்திற்கு கணவனுக்கும், மனைவிக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
03:45 PM (IST) Sep 22
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திருட்டு வழக்கை சிபிசிஐடி விசாரிக்க ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளிடையே மோதல் எழுந்துள்ளது.
03:42 PM (IST) Sep 22
ரிஷப் ஷெட்டி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் பிரம்மிப்பூட்டும் டிரெய்லரில் ஒளிந்திருக்கும் ஆச்சர்யங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
03:23 PM (IST) Sep 22
தனது பிரசாரத்தின் போது அடுக்கடுக்கான பொய் தகவல்களைப் பரப்பி வரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது அவதூறு வழக்கு தொடரும் வகையில் தொடர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
03:23 PM (IST) Sep 22
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது 225cc Ronin மோட்டார்சைக்கிளின் விலையை புதிய GST 2.0 நடைமுறையைத் தொடர்ந்து ரூ.14,330 வரை குறைத்துள்ளது. இந்த விலை மாற்றம் Base, Mid, மற்றும் Top என அனைத்து டிரிம்களுக்கும் பொருந்தும்.
03:14 PM (IST) Sep 22
Tamilnadu Weather Update: தென்தமிழகம் மற்றும் ஆந்திரா பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
03:11 PM (IST) Sep 22
கவின் ஹீரோவாக நடித்த கிஸ் திரைப்படம் கடந்த செப்டம்பர் 19-ந் தேதி திரைக்கு வந்த நிலையில், அப்படம் பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடிவாங்கி உள்ளது. அதன் மூன்று நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
03:09 PM (IST) Sep 22
ஆப்பிள் தனது புதிய iPhone 17-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் கூடுதல் வட்டி இல்லாமல், மாதம் ரூ.3,454 செலுத்தி No-Cost EMI வசதி மூலம் இந்த போனை வாங்கலாம்.