அக்குள் வியர்வை நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்க சில சூப்பரான வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

என்னதான் கம கமன்னு சோப்பு போட்டு குளித்தாலும், சென்ட் அடித்தாலும் அரை மணி நேரம் கழித்து அத்தனையும் தூக்கி போட்டு வரும் கப்புனு வியர்வை நாற்றம் அடிக்கும். வியர்வை வாடை அடித்தால் நண்பர்கள் பக்கத்தில் உட்காரவே தயக்கமாக இருக்கிறது என்று அநேகர் புலம்புகிறார்கள். இவர்கள் வியர்வை நாற்றத்தை போக்க கடைகளில் விற்பனையாகும் பல வித சோப்புகளையும், வாசனை திரவிகளையும் மாறி மாறி உபயோகித்து பர்ஸையே பாதி காலியாக்கிவிடுவார்கள். என்னதான் செலவழிச்சாலும் வியர்வை நாற்றம் அப்படியே இருக்கும். நீங்களும் இதே பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? கவலைய விடுங்க உங்களுக்காக சில சூப்பரான டிப்ஸ்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வியர்வை நாற்றமடிப்பது ஏன்?

வியர்வையில் புரதம் மற்றும் கொழுப்புகளுடன் கெட்ட பாக்டீரியாக்கள் இணைந்து கடுமையான துர்நாற்றத்தை உண்டாகும். காற்று புகாத இருப்பதமான உறுப்புகள் வியர்வையில் மேலும் நாற்றத்தை ஏற்படுத்தும். இதேபோக்க விலையுயர்ந்த செண்டுகளை போட்டாலும் கூட வியர்வை வாடை அடிக்க தான் செய்யும். ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அக்குளில் அடிக்கும் வியர்வை வாடையை நிரந்தரமாக போக்கிவிடலாம் தெரியுமா? அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அக்குள் வியர்வை நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்கள் :

1. குளியல் முறை :

தினமும் இரண்டு முறை குளிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குளிப்பதற்கு வாசனை சோப்புகளை பயன்படுத்தாமல், மருத்துவரின் ஆலோசனை பேரில் கிருமிகள் கொள்ளும் சோப்புகளை வாங்கி பயன்படுத்துங்கள். குளித்து பிறகு அக்குளை துடைத்த பிறகு தான் ஆடை அணிய வேண்டும்.

மாதத்திற்கு 1-2 முறை கட்டாயம் அக்குளில் இருக்கும் முடிகளை நீக்க வேண்டும். ட்ரிம் செய்யாமல் முற்றிலுமாக நீக்குவது தான் நல்லது. முக்கியமாக அக்குளை இறுக்கமாக்கும் ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக தளர்வான காற்று உள்ளே போகும் வகையில் பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

2. எலுமிச்சை சாறு

தினமும் குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து 15 நிமிடம் கழித்து குழியுங்கள். எலுமிச்சை பழம் கிருமிகளை அழிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. மேலும் வாசனையையும் தரும்.

3. சந்தனம்

தினமும் இரவு தூங்கும் முன் சிறிதளவு சந்தனத்தில் நீர் விட்டு நன்கு குளித்து அதை அங்குளில் தடவி வரவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் அக்குளில் வியர்வை நாற்றம் அடிக்காது. மணம் வீசும். ஒரிஜினல் சந்தனம் கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் விற்பனையாகும் சந்தன பொடியை வாங்கி அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தலாம்.

4. மஞ்சள்

மஞ்சளில் கிருமி நாசினி பண்புகள் உள்ளன. எனவே குளித்த பிறகு கிழங்கு மஞ்சளை குழைத்து அக்குளில் பூசுங்கள். ஆடையின் வெளியே தெரியும் என்று நினைத்தால் தினமும் இரவு நேரத்தில் இதை தடவலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வியர்வை சுரப்பில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து விடும். வியர்வையில் நாத்தமும் அடிக்காது.

5. வேப்பிலை

வேப்பிலை வியர்வை நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இதற்கு வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து அதை அக்குளில் தடவி சோப்பு போடாமல் குளித்து வந்தால் நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகள் அழிந்து விடும் கிருமிகள் அழிந்துவிடும்.

6. புதினா இலைகள்

புதினா இலைகளுடன் தயிர் சேர்த்து நன்கு அரைத்து அதை அக்குளில் பூசி காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் வியர்வை நாற்றம் அடிக்காது நறுமணம் வீசும்.

7. தக்காளி

நன்கு பழுத்த நாட்டு தக்காளியை மிக்ஸியில் அரைத்து அதை அங்குள்ளியில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் வியர்வை வாடை அடிக்காது. இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

8. கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை அங்குளில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் வியர்வை வாடை நீங்குவது மட்டுமல்லாமல், அகுல் கருமையும் நீங்கும். வெளியே செல்லும்போதெல்லாம் கற்றாழை ஜெல்லை இப்படி பயன்படுத்தி வந்தால் வியர்வை வாடை வெளியே வராது.

9. தயிர்

தினமும் குளிக்கும் முன் தயிருடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து அது அங்குலி தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வரவும். ஆனால் சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக பாசிப்பருப்பு மாவை படுத்துவது நல்லது. இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் வியர்வை வாடை நிரந்தரமாக நீங்கிவிடும்.

இனி வியர்வை அடிக்கிறது என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். மேலே சொன்னதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி பாருங்கள்.