MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் இனி கடன்.! வங்கிகளுக்கு பறந்த அரசின் முக்கிய உத்தரவு

சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் இனி கடன்.! வங்கிகளுக்கு பறந்த அரசின் முக்கிய உத்தரவு

CIBIL score : கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த சுயவேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், சிபில் ஸ்கோர் போன்ற காரணங்களுக்காக விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டாம் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

3 Min read
Author : Ajmal Khan
Published : Sep 23 2025, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக அரசின் சிறு குறு தொழில் திட்டங்கள்
Image Credit : google

தமிழக அரசின் சிறு குறு தொழில் திட்டங்கள்

தமிழக அரசு தொழில் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சொந்தமாக தொழில் தொடங்குபவர்களுக்கு பயிற்சியும் அளித்து கடன் உதவி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறு குறு தொழில் மேற்கொள்பவர்களுக்கும் கடன் உதவி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கிராமப்புரங்களில் சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

அந்த வகையில் MSME துறையின் மூலம் செயல்படுத்தப்படும் சுயவேலைவாய்ப்பு திட்டங்களில் கிராமப்புரங்களில் சுயவேலைவாய்பை உருவாக்கி பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களான பிரதமந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம். கலைஞர் கைவினைத் திட்டங்களில் வங்கிகளின் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு
Image Credit : our own

இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு

இந்த கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். அப்போது விவசாயிகளின் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பேசும் போது "பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைபடுத்தும் திட்டம். விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திட, அவற்றை மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்களை தயாரிக்க செயல்படுத்தப்படுகிறது. இது மிகவும் முக்கியமான திட்டமாகும். 

கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும். கிராமப்புறங்களில் தொழிற்சாலைகளை கொண்டு வரவும், இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும். இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட 4 ஆண்டுகளில். 15,023 தொழில்முனைவோர்களுக்கு ரூ.326.74 கோடி மானியத்துடன் ரூ.854.53கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

35
மானியம் மற்றும் கடன் உதவி திட்டங்கள்
Image Credit : Google

மானியம் மற்றும் கடன் உதவி திட்டங்கள்

இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. அதுபோல், அனைத்து கைவினை கலைஞர்களையும் உள்ளடக்கிய, கைவினை கலைஞர்களை பொருளாதார ரீதியாக உயர்த்தவும், கலைகளை அழியாமல் பாதுகாக்கவும். கிராமப்புறங்களில் குறுந்தொழில்களை தொடங்கவும் செயல்படுத்தப்பட்ட கலைஞர் கைவினை திட்டத்தில் இதுவரை 4950 நபர்களுக்கு ரூ17.71 கோடி மானியத்துடன் ரூ.83.66 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த 2 திட்டங்களும் கிராமப்புற பொருளாதரம் மற்றும் வேலைவாய்பை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மிகசிறப்பாக செயல்படத்தப்பட்டு வரும் இந்த திட்டங்களில் கடந்த 6 மாதங்களில் தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் கடன் உதவி வழங்குவது தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கலந்தலோசிக்க வங்கிகளின் தலைமைச் செயல் அலுவலர்கள் மற்றம் தலைமை பொது மேலாளர்களுடனும், காணொலி வாயிலாக வங்கிகளின் மாவட்ட பொது மேமலாளர்கள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

45
சிபில் ஸ்கோர்- தமிழக அரசு அறிவுறுத்தல்
Image Credit : Pixabay

சிபில் ஸ்கோர்- தமிழக அரசு அறிவுறுத்தல்

குறு தொழில்கள் செய்யும் தொழில்முனைவோர்களுக்காக செயல்படுதப்படும் இந்த திட்டத்தில் அரசின் மானியங்கள் முறையாக வழங்கப்படும் போது. அதற்கு இணையாக வங்கிகளும் கடன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அரசு துறைகளும், வங்கிகளும் இணைந்து செயல்பட்டால் தான் ஒரு திட்டம் வெற்றியடையும். எனவே, பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கி, கடன் உதவிகளை உடனுக்குடன் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ள வங்கி உயர் அலுவலர்கள், தங்கள் ஆய்வு கூட்டங்களில் இந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சிபில் ஸ்கோர் இல்லை என்று பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. முதல் முறை கடன் பெறுபவர்களுக்கு சிபில் ஸ்கோர் பார்க்கத் தேவை இல்லை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதனை வங்கி மேலாளர்கள் நடைமுறைபடுத்த வேண்டும். சிபில் ஸ்கோர் சிறிது குறைவாக இருந்தாலும், எதற்காக அது குறைந்துள்ளது என்பதை பார்த்து கருணை அடிப்படையில் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

55
விதிமுறைகளை கடுமையாக பின்பற்றாதீங்க
Image Credit : Getty

விதிமுறைகளை கடுமையாக பின்பற்றாதீங்க

பயனாளிகள் அளிக்க வேண்டிய ஆவணங்கள் சரியாக இல்லை என்றாலோ, பயனாளி தொழில் தொடங்க விருப்பம் இல்லை என்று தெரிவித்தாலோ, விண்ணப்பங்களை நிராகரிப்பதற்கு பதிலாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. 

வங்கிகள் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றாமல் பெண்களுக்கு உதவிடும் வகையில், கிராமபுற பொருளாதாரத்தினை உயர்த்திட விரைந்து கடன் உதவிகளை வழங்க வேண்டும். இந்த மூன்று திட்டங்களும் நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தை சார்ந்து உள்ளதால், வங்கி உயர் அலுவலர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தினார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
 
30th T20 • WBBLT20
Rain Delay
SS-WSS-W
(4.0 ov)46/1
PS-WPS-W
(20.0 ov)142/7
SS-W need 97 runs in 96 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(125.0 ov)486/4
Day 3
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Thiruparankundram: பொதுமக்களுக்கு அனுமதி இல்லை! திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள்
Recommended image2
Voter List Special Camp: முகவரி மாற்றம் டூ பெயர் நீக்கம் வரை... தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!
Recommended image3
'ரூ.680 கோடி மக்கள் பணம் செலவு; பாதியில் எப்படி கைவிட முடியும்?' - பரந்தூர் ஏர்போர்ட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!
Related Stories
Recommended image1
Amazon's Apple Offer : போடு தகிட. தகிட.. அமேசான் தந்த ஆப்பிள் விருந்து! ரொம்ப கம்மியான விலையில் ஐபோன், ஐபேட், மேக்புக் வாங்க இதுதான் நேரம்!
Recommended image2
தினமும் 800 ரூபாய் ஊதியம்.! 50 ஆயிரம் பேருக்கு அசத்தலான திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved