- Home
- Cinema
- குடும்பஸ்தன் ஹீரோயின் சான்வி படுகாயம்; கொதிக்கும் எண்ணெய் கொட்டியதால் படப்பிடிப்பில் பரபரப்பு!
குடும்பஸ்தன் ஹீரோயின் சான்வி படுகாயம்; கொதிக்கும் எண்ணெய் கொட்டியதால் படப்பிடிப்பில் பரபரப்பு!
Kudumbasthan Actress Saanve Megghana Injured :'குடும்பஸ்தன்' திரைப்படத்தில் நடித்து பிரபலமான, நடிகை சான்வி மேக்னாவுக்கு படப்பிடிப்பி்ன் போது கொதிக்கும் எண்ணெய் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த சான்வி
தமிழில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'குடும்பஸ்தன்' திரைப்படம் மூலம் பிரபலமானவர் தான் சான்வி மேக்னா. ஹைதராபாத்தை சேர்ந்த சான்வி, தெலுங்கில் சீரியல் நடிகையாகவும், மாடலாகவும் தன்னுடைய பணியை துவங்கிய நிலையில்... பின்னர் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பின்னர் தமிழிலும் கால்பதித்தார்.
மணிகண்டனுக்கு ஜோடியாக...
இயக்குனர் ராஜேஸ்வரி காளிசாமி இயக்கத்தில் இவர் நடித்த காமெடி குடும்ப ட்ராமாவான 'குடும்பஸ்தன்' திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது. தற்போது இவர் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
Indraja: தம்பி ரொம்ப தேடுறான்பா... உனக்கும் பிடிச்ச போட்டோ இது! உருக்கமாக பதிவிட்ட இந்திரஜா சங்கர்!
மாடர்ன் பெண் சான்வி
முதல் படத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தாலும், அடுத்தடுத்த படங்களில் மாடர்ன் பெண்ணாக நடிக்கவே சான்வி வாய்ப்பு தேடி வருவதாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக, சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை கட்டவிழுந்து விடுகிறார். அதே போல் தற்போதைய சென்சேஷனல் இசையமைப்பாளரான சாய் அபயங்கரின் ஆல்பம் பாடல் ஒன்றிலும் தோன்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிஸ்-ஐ நம்பி ஏமாந்த கவின்... ரிலீஸ் ஆகி 3 நாள் ஆகியும் லட்சங்களிலேயே தடுமாறும் வசூல்..!
சான்வி படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கியுள்ளார்
இந்த நிலையில் தான், சான்வி படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கியுள்ளார். அருகில் இருந்த சூடான என்னை இவர் மீது தெறிக்க அதனால் படுகாயம் அடைந்ததுள்ளார். இதனால் சங்கவியின் கையில் பல இடங்களில் கொப்பளம் போட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை சான்வி வெளியிட ரசிகர்கள் பலர் என்ன ஆச்சு என அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பி ஆறுதல் கூறி வருகிறார்கள்.
500 கோடிக்கே அல்லல்படும் கோலிவுட்டின் 1000 கோடி வசூல் கனவை நனவாக்கப்போகும் படம் எது?