Anna Serial Today Episode : ஜீ தமிழ் தொலைக்காட்சியில், அண்ணன் - தங்கைகளின் பாசப்பிணைப்பாக ஒளிபரப்பாகி வரும், 'அண்ணா' சீரியலின் இன்றைய அப்டேட் இதோ...

ஜீ தமிழ் சீரியல் அண்ணா:

'அண்ணா' சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், சண்முகம் எதிர்பாராத விதமாக கௌதமை விசாரித்து வைஜெயந்திக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று ரசிகர்கள் எதிர்பாராத பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்துள்ளது. அதாவது சண்முகத்தின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று தெரியாமல் வைஜெயந்தி குழம்பிய நிலையில், வெட்டுக்கிளி வைகுண்டம் ஆகியோர் அடுத்து என்ன செய்யப் போற என்று சண்முகத்திடம் கேட்கின்றனர் .

இதனைத் தொடர்ந்து, சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராகி அடுத்ததாக கௌதமின் நண்பர்களை விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறான். வைஜெயந்தி வக்கீல் சிவனாண்டி உரிய அனுமதி இல்லாம அவங்களை எப்படி விசாரிக்க முடியும் என்று கேள்வி கேட்கிறார். பிளாஷ்பேக் ஓப்பன் ஆக சண்முகம் ஏற்கனவே அவர்கள் மூவரையும் பிடித்து நீதிபதி நளினி வீட்டிற்கு அழைத்துச் சென்று இவர்களை விசாரிக்க அனுமதி வேண்டும் என்று கேட்டு அனுமதி வாங்கியது தெரிய வருகிறது. இதனால் வைஜெயந்தி தரப்பில் மேலும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Indraja: தம்பி ரொம்ப தேடுறான்பா... உனக்கும் பிடிச்ச போட்டோ இது! உருக்கமாக பதிவிட்ட இந்திரஜா சங்கர்!

தொடர்ந்து சண்முகம் கௌதமின் நண்பர்களை கூண்டில் ஏற்றி விசாரிக்க ரேப், மர்டர் ஆகியவற்றை செய்தது கௌதம் தான் என்று வாக்குமூலம் கொடுக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என கூறுகிறார். இந்த சமயத்தில், வைஜெயந்தி சண்முகத்தை சந்தித்து அடுத்ததா துரையை விசாரிக்கணும்.. அவன் ஜெயில்ல இருக்கான் அவனை வெளியே விட நான் அனுமதிக்க மாட்டேன் என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய தொடர்ந்து 'அண்ணா' சீரியலை பார்க்கவும்.

Idly Kadai vs Annapoorani : இது என்னடா இட்லி கடைக்கு வந்த சோதனை: நயன்தாராவின் படத்தின் காப்பியா?