- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஓ இது அதுல; டிராவல்ஸ் திறப்பு விழாவில் மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கதிர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
ஓ இது அதுல; டிராவல்ஸ் திறப்பு விழாவில் மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கதிர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Kathir and Raji Romance Scene in Tamil : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கதிர் மற்றும் ராஜீயின் ரொமான்ஸ் காட்சிகள் ஏராளமாகவே நிறைந்துள்ளன. அதைப் பற்றி பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் தனது கனவை நிறைவேற்றும் தருணம் இப்போது அமைந்துள்ளது. அப்பா கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய நிலத்தை விற்று செந்திலுக்கும், தனக்கும் கொடுத்த ரூ.10 லட்சம் பணத்தில் கதிர் டிராவல்ஸ் திறக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வரும் நிலையில் அப்பா ரூ.10 லட்சம் கொடுக்க, அண்ணன் சரவணன் டிராவல்ஸ்க்கான அலுவலகத்திற்கு தனது நண்பனின் இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். இடமும் பெரியது. ஆனால், வாடகை தான் கொஞ்சம் சாஸ்தி. இருந்தாலும் பரவாயில்லை என்று ஓகே சொன்னார்.
ரேவதியை சுட்டுத்தள்ளிய மாயா; கதறி அழும் கார்த்திக்: கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
பாண்டியன் டிராவல்ஸ்
இதைத் தொடர்ந்து பெயிண்டிங் ஒர்க் ஆரம்பமானது. இதில், தனது நண்பர்களுக்கு பிரியாணி மட்டும் வாங்கி தருகிறேன் என்று கூறி அவர்களை பெயிண்ட் அடிக்க வைத்தார். அப்போது ராஜீ நானும் பெயிண்ட் அடிக்கிறேன் என்ற பெயரில் வேலையை பார்க்க, கதிருக்கும் ராஜீக்கும் இடையில் ரொமான்ஸ் காட்சிகள் அரங்கேறியது. இதைப் பார்க்கும் போது இதற்கு முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் கதிர் மற்றும் முல்லையான நடித்தவர்களின் ரொமான்ஸ் காட்சிகளைப் போன்று இருந்தது. முதல் சீசனில் ஹோட்டல் என்றால் 2ஆவது சீசனில் டிராவல்ஸ்.
ஜெனிலியா போல் தீபிகாவால் ஜொலிக்க முடியாததற்கு 7 காரணங்கள் இதோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ் - கதிர் மற்றும் முல்லை
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனின் காட்சிகளைப் போன்று தான் 2ஆவது சீசனிலும் காட்சிகள் அரங்கேறி வருகிறது. இப்போது செந்தில் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கையில் அவர் எப்போது வேண்டுமானாலும், அப்பாவிடமுமிருந்து பிரிந்து செல்வார் என்று தெரிகிறது. அது வரையில் இந்த சீரியலில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில் கதிர் மற்றும் ராஜீ இருவரும் பெயிண்ட் அடித்ததைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் ராஜீ புடவை கட்டியிருக்கும் அழகை கண்டு ரசித்தார்.
பாண்டியன் டிராவல்ஸ்
அப்போது அரசி அங்கு வரவே கதிர் ராஜீ மீது கை போட்டுக் கொண்டு மூவரும் செல்ஃபி எடுத்தனர். எது எப்படியோ எலியும், பூனையுமாக இருந்த கதிர் மற்றும் ராஜீ இருவரும் இப்போது காதல் பறவைகளாக ஜோடியாக ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்திலுக்கு அரசு வேலை கிடைக்கவே, கடைசி கடைக்குட்டி சிங்கம் கதிரும் சொந்தமாக பிசினஸ் செய்ய ஆரம்பித்துள்ளார்.
சண்முகத்துக்கு வெற்றி கிடைத்ததா? கோர்ட்டில் நடந்தது என்ன? - அண்ணா சீரியல் அப்டேட்!
கடைசி வரை வராத பாண்டியன்
எல்லோருடனும் அவர் வரவில்லை. மீனாவின் அப்பா, மயிலின் அம்மா என்று எல்லோரும் வந்துவிட்டார்கள். இவ்வளவு ஏன், சரவணனின் அக்கா, மாமாவும் கூட வந்துவிட்டாரகள். ஆனால், பாண்டியன் மட்டும் இதுவரையில் வரவில்லை. அவர் வருவாரா இல்லையா என்பது தான் அனைவரது எதிர்பார்பார்ப்பாகவும் உள்ளது.