ரேவதியை சுட்டுத்தள்ளிய மாயா; கதறி அழும் கார்த்திக்: கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Zee Tamil Serial Karthigai Deepam 2 Update : காதல், செண்டிமெண்ட், எமோஷன், வில்லத்தனம் என அனைத்தும் கலந்த கலவையாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் ரேவதி சுடப்படுகிறார். இதைப் பற்றி இன்றைய பரபரப்பான அப்டேட் இதோ...

கார்த்திகை தீபம்:
Zee Tamil Serial Karthigai Deepam 2 Update : சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு ஒவ்வொரு வாரமும் TRP-யில் தொடர்ந்து டஃப் கொடுத்து வரும் சீரியல் தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம். கடந்த சனிக்கிழமை எபிசோடில் மாயா ரேவதியைக் கொல்ல துப்பாக்கியுடன் கிளம்பிய நிலையில், இன்று என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.
காந்தாரா சாப்டர் 1 படத்தின் கதை இதுதானா? டிரெய்லரில் இதையெல்லாம் நோட் பண்ணீங்களா..!
நவராத்திரி பூஜை:
கோவிலில் நடக்கும் நவராத்திரி பூஜையில் கலந்து கொள்ள சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் கோவிலுக்கு வந்து இறங்குகின்றனர். பிறகு கொலு பூஜை தொடங்க சாமுண்டீஸ்வரி, என் மகள் சுவாதி நல்லா பாடுவா என்று சொல்ல சுவாதி சந்தோஷமாக பாட்டு பாடுகிறாள். அதை பார்த்து எல்லோரும் ரசிக்கின்றனர்.
கிஸ்-ஐ நம்பி ஏமாந்த கவின்... ரிலீஸ் ஆகி 3 நாள் ஆகியும் லட்சங்களிலேயே தடுமாறும் வசூல்..!
மாயாவின் வருகை:
அதன் பிறகு சாமுண்டீஸ்வரி தன்னுடைய வீட்டில் செய்யப்பட்ட பிரசாதத்தை எல்லோருக்கும் கொடுக்கிறார். பிரசாதம் வாங்க வரிசையில் நிற்கும் ஆட்களின் ஒருவராக மாயாவும் உள்ளார். தன்னுடைய அடையாளத்தை மறைக்க, முகம் முழுவதும் மஞ்சளை பூசிக்கொண்டு வரிசையில் நிற்கிறாள்.
ரேவதியை சுட்ட மாயா:
இதற்கிடையில் கார்த்திக்கு போலீசாரிடம் இருந்து ஒரு போன் கால் வருகிறது. அப்போது மாயா போலீசாரிடம் இருந்து தப்பிவிட்டதாகவும், ரேவதி உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுக்கின்றனர். கார்த்தி ரேவதியை காப்பாற்ற செல்வதற்கு முன்பே... மாயா தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு ரேவதியை சுட அவள் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுகிறாள்.
Indraja: தம்பி ரொம்ப தேடுறான்பா... உனக்கும் பிடிச்ச போட்டோ இது! உருக்கமாக பதிவிட்ட இந்திரஜா சங்கர்!
கண்ணீருடன் ரேவதியை தூக்கி செல்லும் கார்த்திக்:
இதனால் சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். மாயா அங்கிருந்து தப்பி ஓட... கார்த்திக் கண்ணீருடன் ரேவதியை காரில் ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிடல் கிளம்புகிறான். உனக்கு ஒன்னும் ஆகாது ரேவதி நான் இருக்கேன் என்று ஆறுதல் சொன்னபடி ஹாஸ்பிடலுக்கு வருகிறான்.
ரேவதியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தவன் போலீசையை அழைத்து அந்த மாயாவை பிடிச்சிட்டீங்களா? என்னாச்சு என்று விசாரிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? மாயா பிடிபடுவாளா? இல்லையா என்பதை அறிய தொடர்ந்து கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
