- Home
- Cinema
- Karthigai Deepam 2 : இந்த காலத்துல லவ் லெட்டரா? கட்டுன புருஷன் கிட்ட லவ்வ சொல்ல படாதபாடு படும் ரேவதி!
Karthigai Deepam 2 : இந்த காலத்துல லவ் லெட்டரா? கட்டுன புருஷன் கிட்ட லவ்வ சொல்ல படாதபாடு படும் ரேவதி!
Karthigai Deepam 2 Indraya Episode Revathi Love Letter Scene : கார்த்திகை தீபம் 2 சீரியலில் தாலி கட்டிய கணவரிடம் தனது காதலை சொல்ல ரேவதி படும் கஷ்டத்தைப் பார்த்து அவருக்கு அவரது தங்கை சுவாதியும் உதவி செய்துள்ளார்.

சந்திரகலாவின் பிளானை உடைத்தெறிந்த ரேவதி
Karthigai Deepam 2 Indraya Episode Revathi Love Letter Scene : கார்த்திகை தீபம் 2 விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், கார்த்திக் மற்றும் ரேவதி இடையிலான காட்சிகள் தான் காண்போரை ரசிக்க வைக்கிறது. ஜீ5 தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்றுதான் கார்த்திகை தீபம் 2. முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 2ஆவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரையில் 900 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
கார்த்திக்கை மாட்டுவிட பிளான் போட்ட சந்திரகலா
இதில் நேற்றைய எபிசோடில் கார்த்திக்கிற்கு எதிராக சநதிரகலா ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தார். அதனை ரேவதியிடமும், அவரது அம்மாவிடம் காட்டி கார்த்திக்கை அந்த வீட்டிலிருந்து துரத்த பிளான் போட்டார். ஆனால், அவரது பிளான் எல்லாவற்றையும் ரேவதி சுக்குநூறாக நொறுக்கியுள்ளார்.
கார்த்திக் கையொப்பமிட்ட ஆவணங்களை ரகசியமாக எடுத்துச் சென்று தீயில் எரித்துள்ளார். தொடர்ந்து போன் ஆதாரங்களையும், ஃபிரண்ட் கிட்ட போன் பேசுகிறேன் என்ற பெயரில் எல்லாவற்றையும் டெலிட் செய்துவிட்டு கொடுத்துள்ளார். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி வரவும், அவரிடம் டிரைவர் மாப்பிள்ளை யார் என்பதை தெரியப்படுத்துகிறேன் என்ற பெயரில் ஆவணங்களை காட்ட முயற்சித்து ஏமாற்றம் அடைந்தார். மேலும், ரேவதியை அழைத்து அவரிடம் ஆவணங்களை காட்டியதாக கூற, அவரோ இல்லை என்று மறுத்துள்ளார்.
ரேவதியின் காதலுக்கான போராட்டம்
கடைசியில் சந்திரகலாவை சைக்காட்ரிஸ்டிடம் சென்று பார்க்கும்படி கூறுகிறார். இதனால் கோபமடைந்த சந்திரகலா ரேவதியிட சென்று கேட்க, அவரோ என்னுடைய கணவர் தான் பாட்டி, தாத்தாவுடைய பேரன் என்றும், அவருடைய உண்மையான பெயர் கார்த்திக் என்றும் எனக்கு ஏற்கனவே தெரியும் என்ற உண்மையை கூறுகிறார். இதைக் கேட்டு சந்திரகலா அதிர்ச்சி அடைகிறார்.
கணவரிடம் காதலை சொல்ல கஷ்டப்படும் ரேவதி
அதன் பிறகு ரேவதி தனது காதலை சொல்ல பல வழிகளில் முயற்சித்து கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. வேறு வழியே இல்லாமல் செங்கல்சூளை கணக்கு நோட்டில் லவ் லெட்டரை எழுதி வைத்துள்ளார். அதனை தனது கணவர் தான் படிப்பார் என்ற ஆசையில் இருந்தார். ஆனால், அவர் படிக்கவில்லை. அவரை படிக்கவிடவில்லை. அந்த நோட்டை பறிந்த சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் கொடுத்து நீ தான் சரிபார்க்க வேண்டும் என்று கூறினார். ஆனால், அவரோ மீண்டும் கார்த்திக்கிடம் கொடுக்க, மறுபடியும் நோட்டை பறித்த சந்திரகலா மீண்டும் சாமுண்டீஸ்வரியிடம் சென்றது. அப்போதும் அவர் கார்த்திக்கிடம் தான் கொடுத்தார். ஆனால், அப்போதும் சந்திரகலா நோட்டை பறித்தார்.
கார்த்திகை தீபம் 2 இன்றைய எபிசோடு
கடைசியில் நோட் மயிலிடம் சென்று பிறகு மீண்டும் சந்திரகலாவிடம் வந்தது. இதனால் ரேவதி பதற்றம் அடைந்தார். அப்போது அவருக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் சுவாதி கீழே விழுந்த மாதிரி நடித்து அவரை காப்பாற்றினார். அப்போது நீ மாமாவிற்கு லெட்டர் எழுதி அதனை நோட்டுக்குள்ள வைக்கும் போது நான் அதனை பார்த்துவிட்டேன். அதை மட்டுமின்றி நீ படும் கஷ்டத்தையும் பார்த்தேன். அதனால் தான் உனக்கு உதவி செய்தேன் என்றார்.
இதைத் தொடர்ந்து சந்திரகலா கடைசியாக ஒரு பிளான் போட்டார். அதாவது கார்த்திக்கின் அம்மா இறந்திருக்கும் சூழலில் அவர் அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது. அப்படியிருக்கும் போது வேண்டுமென்றே சந்திரலேகா அசைவ உணவுகளை ஆர்டர் செய்து வைத்திருந்தார். அவரை சாப்பிட அழைக்குமாறு சாமுண்டீஸ்வரியிடம் கூறினார். அதோடு கார்த்திகை தீபம் 2 சீரியலின் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.