இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், அதிபர் டிரம்ப், வர்த்தகம், ஆட்டோ, கிரிக்கெட் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:56 PM (IST) Jun 19
இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
11:36 PM (IST) Jun 19
SKM சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
11:30 PM (IST) Jun 19
நடிகை காயத்ரி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘காயல்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
10:58 PM (IST) Jun 19
யுஜிசி நெட் ஜூன் 2025 நகர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 25 முதல் 29 வரை தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு ugcnet.nta.ac.in ஐப் பார்க்கவும்.
10:35 PM (IST) Jun 19
ரத்த தானம் செய்வதற்கு முதலில் நாம் சத்தாகவும், தெம்பாகவும் இருக்க வேண்டும். அதற்கு ரத்த தானம் செய்த பிறகு மட்டுமல்ல முன்பும் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில உணவுகளை சாப்பிட வேண்டும். இவற்றை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
10:30 PM (IST) Jun 19
சமீபத்தில் வெளியான ‘படை தலைவன்’ திரைப்படம் ஒரு வாரம் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
10:29 PM (IST) Jun 19
முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
09:51 PM (IST) Jun 19
பலரது வீடுகளில் என்ன செய்தாலும் எலிகள் தொல்லை பெரிய பிரச்சனையாக இருக்கும். ஆனால் சில எளிய வழிகளை பின்பற்றானாலே எலி தொல்லைக்கு தீர்வு காண முடியும். இவற்றை செய்வதால் உங்கள் வீட்டில் இருக்கும் எலிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.
09:31 PM (IST) Jun 19
கீழடி அகழாய்வை புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
09:24 PM (IST) Jun 19
கருட புராணத்தில் நம் வாழ்நாளில் செய்யும் பாவங்கள் மற்றும் மரணத்திற்கு பிறகு அந்த பாவங்களுக்கு நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றி பல குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு கருட புராணம் விடுக்கும் எச்சரிக்கை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
09:09 PM (IST) Jun 19
இளம் வயது பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முகப்பரு. இதனை சரி செய்வதற்கு பல விதமான கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதற்கு பதில் வீட்டில் உள்ள இந்த 8 பொருட்களை பயன்படுத்தினால் இயற்கையாக முகப்பருவை விரட்டலாம்.
08:56 PM (IST) Jun 19
காஞ்சிபுரம் பட்டுப்புடவை வாங்க போகும் போது கலர், விலையை மட்டும் தான் பலரும் பார்க்கிறார்கள். ஆனால், அதை விடவும் தெரிந்து கொள்ள வேண்டிய, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. இதனால் தரமான புடவைகளை நம்மால் வாங்க முடியும்.
08:48 PM (IST) Jun 19
நிதி முறைகேடு செய்ததாக சகோதரர் கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
08:37 PM (IST) Jun 19
வாட்ஸ்அப் குழு அழைப்புகளில் தடையற்ற உரையாடலுக்காக 'கை உயர்த்து' அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இது பயனர்கள் பேச விரும்பும் போது சைகை செய்ய உதவும், குறுக்கீடுகளை குறைத்து, குழு கலந்துரையாடலை மேம்படுத்தும்.
08:26 PM (IST) Jun 19
ஜியோ, கிராஃப்டான் உடன் இணைந்து ₹600-க்குள் புதிய கேமிங் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வரம்பற்ற டேட்டா, அழைப்புகள், SMS, ஜியோ கேம்ஸ் கிளவுட் மற்றும் BGMI அணுகல் ஆகியவை அடங்கும்.
08:25 PM (IST) Jun 19
அதர்வா, நிமிஷா சஜயன் நடித்துள்ள டி.என்.ஏ திரைப்படம் சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
08:21 PM (IST) Jun 19
இந்தியாவில் தற்போது சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது கோடிக்கணக்கான இளைஞர்களின் பிரதான ஏக்கமாக உள்ளது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் கார் நிறுவனங்களும், வங்கிகளும் EMIயில் கார்களை அடிமட்ட விலைக்கு வழங்குகின்றன.
08:17 PM (IST) Jun 19
Gmail 'Unsubscribe' மோசடி எச்சரிக்கை! தீங்கிழைக்கும் Unsubscribe இணைப்புகள் மூலம் ஹேக்கர்கள் மால்வேரை நிறுவி, தரவுகளைத் திருடி, உங்கள் கணினியை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம். உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை அறியுங்கள்.
08:05 PM (IST) Jun 19
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ChatGPT ஐப் பயன்படுத்தி தனது விரிவுரை தயாரிப்பு நேரத்தை 30 மணிநேரத்தில் இருந்து 5 மணிநேரமாகக் குறைத்ததை பகிர்ந்துள்ளார், AI ஒரு வேலைக்கு மாற்றாக இல்லாமல், உற்பத்தித்திறன் கருவியாகப் பார்க்கிறார்.
07:52 PM (IST) Jun 19
இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. 47 பேர் காயம் அடைந்தனர்.
07:44 PM (IST) Jun 19
ஜூலை 1 முதல், ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய IRCTC அனுமதிக்கும். பின்னர் ஜூலை 15 முதல், தட்கல் முன்பதிவுகளுக்கு ஆதார் அடிப்படையிலான OTP அங்கீகாரம் கட்டாயமாகும்.
07:33 PM (IST) Jun 19
‘தக் லைஃப்’ திரைப்படம் குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
06:51 PM (IST) Jun 19
2025-2026 காலகட்டத்தில் இந்திய சந்தையில் ஐந்து புதிய மிட்-சைஸ் SUVகள் அறிமுகமாக உள்ளன. டாடா சியரா, மாருதி எஸ்குடோ, புதிய ரெனால்ட் டஸ்டர், புதிய தலைமுறை கியா செல்டோஸ் மற்றும் நிசான் காஷ்காய் ஆகியவை அந்த மாடல்கள்.
06:49 PM (IST) Jun 19
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரை எந்த டிவியில் பார்க்கலாம், முழு அட்டவணை உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.
06:31 PM (IST) Jun 19
‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்திருக்கும் நிலையில் 50 கோடி வசூலை நெருங்க முடியாமல் தவித்து வருகிறது.
06:25 PM (IST) Jun 19
ஹீரோ நிறுவனம், தனது விடா EV பிராண்டின் கீழ், நடைமுறை அம்சங்கள் மற்றும் பரந்த கவர்ச்சியை வழங்க வடிவமைக்கப்பட்ட பட்ஜெட்டுக்கு ஏற்ற மின்சார ஸ்கூட்டரான விடா VX2 ஐ ஜூலை 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.
06:00 PM (IST) Jun 19
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் எனவும், ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
05:38 PM (IST) Jun 19
05:34 PM (IST) Jun 19
டிரம்ப்-முனீர் சந்திப்பு குறித்து பாகிஸ்தான் AIஉதவியுடன் அறிக்கை வெளியிட்டது நெட்டிசன்களின் மீம்ஸ்க்கு வழிவகுத்தது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்ப்போம்.
05:20 PM (IST) Jun 19
கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
05:02 PM (IST) Jun 19
ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் சேவை வழங்கும் வகையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களைக் குறைத்துள்ளது. இந்த விதிமுறை வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் அமைலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
04:30 PM (IST) Jun 19
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படத்தின் டிரெய்லரை பிரபல நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
03:59 PM (IST) Jun 19
அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் கால்வாயில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குடியிருப்பாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
03:55 PM (IST) Jun 19
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? விராட் கோலியின் இடத்தை பிடிக்கப் போவது யார்? என்பது குறித்து பார்ப்போம்.
03:23 PM (IST) Jun 19
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் அரசின் பங்களிப்பு குறித்து உரையாற்றினார்.
03:16 PM (IST) Jun 19
நடிகர் ஸ்ரீ தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
03:04 PM (IST) Jun 19
03:03 PM (IST) Jun 19
அப்பிள் நிறுவனத்தின் நீண்ட நாள் கனவான மடிக்கக்கூடிய ஐபோன் 2025 இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.5-இன்ச் மற்றும் 7.8-இன்ச் இரட்டைத் திரை, டச் ஐடி, ₹1.65 லட்சம் முதல் ₹2 லட்சத்திற்கும் மேற்பட்ட விலையில் கிடைக்கும்
02:43 PM (IST) Jun 19
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், அடுத்ததாக நடிக்க உள்ள ஏகே 64 திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
01:46 PM (IST) Jun 19