நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படத்தின் டிரெய்லரை பிரபல நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

Vikram Prabhu ‘Love Marriage’ Trailer

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விக்ரம் பிரபு. இவர் சிவாஜி கணேசனின் பேரன் மற்றும் நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கும்கி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘கும்கி’ அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாகவும் மாறியது. தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வெளியான ‘இவன் வேற மாதிரி’ திரைப்படமும் விக்ரம் பிரபுவுக்கு புகழைப் பெற்றுக் கொடுத்தது. அதன் பின்னர் ‘அரிமா நம்பி’, ‘சிகரம் தொடு’, ‘வெள்ளைக்காரதுரை’, ‘இது என்ன மாயம்’, ‘வாகா’, ‘புலிக்குத்தி பாண்டி’, ‘டாணாக்காரன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘இறுகப்பற்று’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

‘லவ் மேரேஜ்’ படத்தில் பணியாற்றிய கலைஞர்கள்

கவனமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ரம் பிரபு, சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார். தற்போது மீண்டும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘லவ் மேரேஜ்’. இந்த படம் ஒரு சிறந்த குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. திருமணத்தைச் சுற்றி நடக்கும் சிக்கல்கள், சமூக குடும்ப எதிர்பார்ப்புகள் குறித்து இந்த படம் பேசுகிறது. ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆகும் பொழுது அவர் சந்திக்கும் சவால்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. படத்தை அறிமுக இயக்குனர் சண்முகப்பிரியன் இயக்கியுள்ளார். இவர் ‘நோட்டா’, ‘எனிமி’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் சங்கருடன் இணை இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார்.

திருமணம் தள்ளிப் போகும் இளைஞரின் கதை

இந்த படத்தில் சுஷ்மிதா பட் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ‘டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்’ என்கிற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர். இவர்களுடன் மீனாட்சி தினேஷ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு, அருள்தாஸ், ரமேஷ் திலக், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் சத்யராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை மதன் கிறிஸ்டோபர் மேற்கொள்ள, ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். அஸ்யூர் ஃபிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்தப. படத்தை தயாரித்துள்ளன. இன்றைய கால இளைஞர்கள் திருமணம் தாமதமாவதால் சமூகத்திலும் குடும்பத்திலும் பல பிரச்சனைகளை மேற்கொள்கின்றனர். அந்த சிக்கல்களை நகைச்சுவையாகவும், அதே சமயம் உணர்வுபூர்வமாகவும் இந்த படம் விளக்கியுள்ளது. இன்றைய தலைமுறையினர் எதிர்கொண்டு வரும் திருமண சவால்கள், பெற்றோரின் எதிர்பார்ப்புகள், சமூகத்தின் பார்வைகளை இந்த படம் அழகாக விளக்கியுள்ளது.

‘லவ் மேரேஜ்’ டிரெய்லரை வெளியிட்ட தனுஷ்

கிராமிய பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் சிறந்த பொழுதுபோக்க படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் மிஷ்கின் பாடிய “எடுடா பாட்டில்..” என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படம் வருகிற ஜூன் 27 ஆம் தேதி உலகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இறுகப்பற்று’ படத்திற்குப் பின்னர் விக்ரம் பிரபு நடிக்கும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

எதிர்பார்ப்பை அதிகரித்த ‘லவ் மேரேஜ்’ டிரெய்லர்

டிரெய்லரைப் பார்க்கும் பொழுது 30 வயதை கடந்த பின்னரும் விக்ரம் பிரபு திருமணமாகாமல் இருக்கிறார். அவருக்கு பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. திருமணம் வரை செல்கின்ற அந்த சம்பந்தம் கடைசியில் பிரச்சனையில் முடிகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது? விக்ரம் பிரபுவிற்கு திருமணம் ஆனதா? என்பதை நகைச்சுவையாகவும் அதே சமயம் உணர்வுபூர்வமாகவும் காட்டப்பட்டுள்ளது. விக்ரம் பிரபுவின் யதார்த்தமான நடிப்புடன் இணைந்து, சண்முகபிரியனும் இயக்கமும் லவ் மேரேஜ் திரைப்படத்தை இந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் பிரபுவிற்கு ரசிகர்கள் தங்களை வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Love Marriage Official Trailer | Vikram Prabhu, Sushmitha Bhat | Sean Roldan