MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இனி 15 நாளில் கையில் கிடைக்கும் வாக்காளர் அடையாள அட்டை.! விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா.?

இனி 15 நாளில் கையில் கிடைக்கும் வாக்காளர் அடையாள அட்டை.! விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா.?

வாக்காளர் அட்டை பெறுவதற்கான புதிய செயல்முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வாக்காளர் அட்டை வழங்கப்படும். புதிய முறையில், ஒவ்வொரு கட்டத்திலும் குறுஞ்செய்தி வாயிலாக வாக்காளர்களுக்கு தகவல்கள் அனுப்பப்படும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jun 19 2025, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வாக்காளர் அட்டையின் முக்கியத்துவம்
Image Credit : GOOGLE

வாக்காளர் அட்டையின் முக்கியத்துவம்

தேர்தல்களில் வாக்களிக்கஅடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு வாக்காளர் அட்டை முதன்மையான ஆவணமாகும். வாக்காளர் அட்டை இந்தியாவில் அரசு மற்றும் தனியார் சேவைகளுக்கு அடையாளச் சான்றாக பயன்படுத்தப்படுகிறது. வங்கிக் கணக்கு தொடங்குதல், கடன் விண்ணப்பித்தல், மற்றும் பிற நிதி சேவைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 

இந்த நிலையில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றவர்கள் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்துவிட்டு புதிய அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றங்களைச் செய்தவர்கள் இனிமேல் புதிய அட்டைக்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டியதில்லை இவர்களுக்காகவே தேர்தல் ஆணையம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

25
இனி 15 நாட்களில் கையில் கிடைக்கும் வாக்காளர் அட்டை
Image Credit : Getty

இனி 15 நாட்களில் கையில் கிடைக்கும் வாக்காளர் அட்டை

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கூறுகையில், வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் (EPIC) விரைவாக வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய செயல்முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வாக்காளர் சேர்க்கை அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர் விவரங்களில் மாற்றம் செய்யப்படும்போது, வாக்காளர் பட்டியலில் அந்தத் திருத்தம் செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முறையில், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை. செயலாக்கம் முதல் தபால் துறையின் மூலமாக வாக்காளரிடம் வழங்கப்படும் வரை ஒவ்வொரு கட்டமும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் செயல்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் குறுஞ்செய்தி வாயிலாக தகவல்களைப் பெறுவார்கள். இந்த நோக்கில், தேர்தல் ஆணையம் ECINet எனும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையதளத்தில் ஒரு தனிப்பட்ட ஐ.டி தொகுதியை (IT Module) உருவாக்கியுள்ளது. 

தற்போதுள்ள முறையை மாற்றி, தபால் துறையின் பயன்பாட்டு இணையதள இடைமுகம் ECINet உடன் இணைக்கப்படும். இதன் மூலம் சேவை வழங்கல் மேம்படுவதுடன், தரவின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதிதாக வாக்காளர் அடையாள அட்டையை பெற விண்ணப்பிப்பது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.

Related Articles

Related image1
LOAN : பெண்களுக்கு குஷியோ குஷி.! கம்மியான வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன்- கூட்டுறவு வங்கி சூப்பர் திட்டம்
Related image2
TN Weather Update: நேற்று எந்தெந்த மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்! தமிழகத்தில் இன்றைய வானிலை எப்படி இருக்கும்?
35
வாக்காளர் பட்டியில் பெயர் சேர்ப்பது எப்படி.?
Image Credit : Getty

வாக்காளர் பட்டியில் பெயர் சேர்ப்பது எப்படி.?

வாக்காளர் அடையாள அட்டை பெற தகுதிகள்

  • வாக்காளர் அடையாள அட்டை பெற 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
  • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • உங்கள் வசிப்பிடத்திற்கு ஏற்ப வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும்.

வாக்காளர் அட்டை பெற அடையாள ஆவணங்கள்

  • ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், அல்லது அரசு வழங்கிய பிற அடையாள அட்டைகள்.
  • ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், மின்சார கட்டண ரசீது, அல்லது வாடகை ஒப்பந்தம்.
  • புகைப்படம்: சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
  • பிறந்த தேதி சான்று: பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், அல்லது ஆதார் அட்டை.
45
வாக்காளர் பெயர் சேர்ப்பு ஆன்லைன் விண்ணப்பம்
Image Credit : Getty

வாக்காளர் பெயர் சேர்ப்பு ஆன்லைன் விண்ணப்பம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nvsp.in அல்லது voterportal.eci.gov.in இல் என்ற வலைதளத்திற்கு செல்லவும். அங்கு புதிய வாக்காளர் பக்கமான "New Voter Registration" அல்லது "Form 6" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். 

அதில் இடம்பெற்றுள்ள பெயர், வயது, தந்தை பெயர், இருப்பிடம், தாலுக்கா, மாவட்டம், மாநிலம் ஆகிய தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆவணங்களை பதிவேற்றவும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, தேர்தல் ஆணையத்தில் இருந்து எண் வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையின் உங்கள் விண்ணப்ப நிலை எந்த நிலையில் உள்ளது என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

55
நேரில் சென்று வாக்காளர் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் முறை
Image Credit : social media

நேரில் சென்று வாக்காளர் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் முறை

வாக்காளர் அடையாள அட்டையில் அருகிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் இருந்து Form 6 ஐ பெற்றுக்கொள்ளலாம்.

சரியான விவரங்களுடன் அதை பூர்த்தி செய்து, ஆதார ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். இதனையடுத்து  அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவார்கள்.

சரிபார்ப்பு செயல்முறை:

 விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, தேர்தல் ஆணைய அதிகாரிகள்  முகவரியைச் சரிபார்க்க வருவார்கள். சரிபார்ப்பு முடிந்தவுடன், அனைத்து தகவலும் சரியாக இருக்கும் பட்சத்தில்  பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

வாக்காளர் அட்டை பெறுதல்:

உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவுடன், வாக்காளர் அடையாள அட்டை வாக்காளரின் முகவரிக்கு அனுப்பப்படும்.

இது மட்டுமில்லாமல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றிற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

  • புதிய வாக்காளர்கள் Form 6 பயன்படுத்த வேண்டும்.
  • தவறுதலாக பதிவு செய்யப்பட்ட பெயரை நீக்க Form 7 பயன்படுத்தவும்.
  • வாக்காளர் பட்டியலில் மாற்றங்கள் (முகவரி, பெயர் திருத்தம்) செய்ய Form 8 பயன்படுத்தவும்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
தேர்தல்
தேர்தல் முடிவு
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
LOAN : பெண்களுக்கு குஷியோ குஷி.! கம்மியான வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன்- கூட்டுறவு வங்கி சூப்பர் திட்டம்
Recommended image2
TN Weather Update: நேற்று எந்தெந்த மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்! தமிழகத்தில் இன்றைய வானிலை எப்படி இருக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved